தௌலத் கான் லௌதி (Daulat Khan Lodi) லௌதி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான இப்ராகிம் லௌதியின் ஆட்சியின் போது இலாகூர் கவர்னராக இருந்தார். இப்ராகிம் மீதான வெறுப்பின் காரணமாக, தௌலத் பாபரை இராச்சியத்தின் மீது படையெடுக்க அழைத்தார். [1] ஆரம்பத்தில் முழு பஞ்சாபின் ஆளுநராக இருந்த இவர் பின்னர் ஜலந்தர் தோப் என்ற பகுதியின் ஆளுநராக இருந்தார். பஞ்சாபின் முந்தைய நிஜாம் தாதர் கானின் மகனாவார். [2] இவர் சிக்கந்தர் லௌதியின் (நிஜாம் கான் லௌதி என்றும் அழைக்கப்படுகிறார்) பெக்லோல் லௌதியின் கீழ் லௌதி வம்சத்திலிருந்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தினார். தௌலத் கான் வம்சத்திற்கு விசுவாசமாக இருந்தார். ஆனால் தனது கடினமான, பெருமை மற்றும் சந்தேகத்திற்குரிய இயல்பு காரணமாக இப்ராகிமிற்கு துரோகம் செய்தார். [3]
பாபரை இந்தியாவிற்கு வரவழைப்பதன் மூலம் தௌலத் கான் தொடங்கிய நிகழ்வுகள் இறுதியாக 1526 இல் பானிபட் போரில் முடிவடைந்தது. அங்கு இப்ராகிம் கான் லௌதி தனது உயிரை இழந்தார். பாபர் இந்தியாவின் ஆட்சியாளராகி, முகலாயப் பேரரசைக் தோற்றுவித்தார்.
{{cite book}}
: CS1 maint: others (link)