ந. ரங்கசாமி | |
---|---|
மார்ச் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் | |
புதுச்சேரி மாநில முதல்வர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
துணைநிலை ஆளுநர் | தமிழிசை சவுந்தரராஜன் |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | தட்டாஞ்சாவடி |
பதவியில் 16 மே 2011 – 6 சூன் 2016 | |
முன்னையவர் | வி. வைத்தியலிங்கம் |
பின்னவர் | வி. நாராயணசாமி |
தொகுதி | இந்திரா நகர் கதிர்காமம் |
பதவியில் 1 அக்டோபர் 2006 – 4 செப்டம்பர் 2008 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | வி. வைத்தியலிங்கம் |
தொகுதி | தட்டாஞ்சாவடி |
9ஆவது பாண்டிச்சேரி முதல்வர் | |
பதவியில் 27 அக்டோபர் 2001 – 1 அக்டோபர் 2006 | |
முன்னையவர் | ப. சண்முகம் |
பின்னவர் | பதவி நீக்கப்பட்டது |
புதுச்சேரி சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 16 மே 2016 – 22 பிப்ரவரி 2021 | |
துணைநிலை ஆளுநர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 ஆகத்து 1950 பாண்டிச்சேரி, பிரெஞ்சு இந்தியா (தற்போது - பாண்டிச்சேரி, புதுச்சேரி, இந்தியா) |
அரசியல் கட்சி | என். ஆர். காங்கிரஸ் (2011—தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1990—2011) |
பெற்றோர் | தந்தை : நடேசன் கிருஷ்ணசாமி கவுண்டர் தாயார் : பாஞ்சாலி |
வாழிடம்(s) | எண்: 9, விநாயகர் கோவில் தெரு, லாசுபேட்டை, புதுச்சேரி - 605 009. |
வேலை | அரசியல்வாதி, விவசாயம் |
புனைப்பெயர்(s) | மக்கள் முதல்வர் என். ஆர் |
ந. ரங்கசாமி (N. Rangasamy) நடேசன் ரங்கசாமி பிறப்பு: ஆகத்து 4, 1950)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[2][3] இவர் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார்.
இவர் ஆகத்து 4, 1950 ஆம் ஆண்டு நடேசன் கிருஷ்ணசாமி கவுண்டர் - பாஞ்சாலி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும் மற்றும் புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்தார்.[4]
இவர் 2001 முதல் 2008 வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார் மற்றும் மே 16, 2011 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும், தொகுதிகளுக்கும் வந்தவர்.[5] இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார். பின்பு 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் அணி 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
ஆண்டு | தொகுதி | முடிவு | பெற்ற வாக்குகள் | எதிர்க்கட்சி வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
---|---|---|---|---|---|---|
1990 | தட்டாஞ்சாவடி | தோல்வி | 8521 | வி. பெத்தபெருமாள் | 9503 | 982 |
1991 | தட்டாஞ்சாவடி | வெற்றி | 12545 | வி. பெத்தபெருமாள் | 5285 | 7260 |
1996 | தட்டாஞ்சாவடி | வெற்றி | 9989 | வி. பெத்தபெருமாள் | 7699 | 2290 |
2001 | தட்டாஞ்சாவடி | வெற்றி | 14323 | வி. பெத்தபெருமாள் | 8769 | 5554 |
2006 | தட்டாஞ்சாவடி | வெற்றி | 27024 | தி. குணசேகரன் | 2026 | 24998 |
2011 | கதிர்காமம் | வெற்றி | 16323 | வி. பெத்தபெருமாள் | 6566 | 9757 |
2011 | இந்திரா நகர் | வெற்றி | 20685 | வி. ஆறுமுகம் | 4008 | 16677 |
2016 | இந்திரா நகர் | வெற்றி | 15463 | வி. ஆறுமுகம் | 12059 | 3404 |
2021 | ஏனாம்[6][7][8] | தோல்வி | 16475 | கோல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் | 17131 | 656 |
2021 | தட்டாஞ்சாவடி | வெற்றி | 12978 | கே. சேது (எ) சேது செல்வம் | 7522 | 5456 |