நங்கல் சிரோகி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°11′35″N 76°07′55″E / 28.193161°N 76.132078°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | மகேந்திரகர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10.4 km2 (4.0 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 10,000 |
• அடர்த்தி | 960/km2 (2,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 123028 |
தொலைபேசி இணைப்பு எண் | 01285 |
வாகனப் பதிவு | எச்ஆர்-34 |
இணையதளம் | haryana |
நங்கல் சிரோகி (Nangal Sirohi) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தின் மகேந்திரகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். வர்ணம் பூசப்பட்ட செகாவதி இராஜபுத்திர கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற அவேலிகளுக்கு இது புகழ் பெற்றது. [1] இது தெற்கு அரியானாவில் உள்ள மகேந்திரகரிலிருந்து நர்னால் (நர்னாலில் இருந்து 15.5 கிமீ) நோக்கி 9.5 கிமீ தொலைவில் உள்ளது.
நங்கல்-சிரோகி கோஸ்யா கோத்ரத்தின் அஹிர்களால் நிறுவப்பட்டது. 500 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் மூதாதையர்கள் அண்டை நாடான தெரோலி அஹிர் கிராமத்திலிருந்து வந்தவர்கள். [1] நங்கல் சிரோகி கிராமம் மொகிந்தர் கர் மற்றும் நர்னால் நகருக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை 148 பி இல் அமைந்துள்ளது.
முன்பு ஜெய்ப்பூர் மாநிலத்தின் கீழிருந்த இந்தப் பகுதி ஜாட் ஆட்சியாளர் பாட்டியாலா மகாராஜாவின் கீழ் வந்தது. [1] அவேலி கோட்டையைக் கட்டியவர்களில் முதன்மையானவர் லாலா தேக் சந்த் என்பவராவார். [1] இங்கு அமைந்துள்ளவரலாற்றுச் சிறப்புமிக்க அவேலிகள், எட்டு தலைமுறைகளுக்கு முன்பு சத்னாலியிலிருந்து இடம்பெயர்ந்த பணியாக்களால் கட்டப்பட்டது. [1] பின்னர் விக்ரம் நாட்காட்டி 1959இல் (1902 கி.பி), லாலா தீன் தயாள் என்பவர் செகாவதி இராஜ்புத்திர கட்டிடக்கலையில் அலங்கரிக்கப்பட்ட கேரவன்செராயைக் கட்டினார். [1]