நடுவண் வியட்நாம் (Central Vietnam) (வியட்நாமியம்: Miền Trung) என்பது முன்பு திரங் பான் (Trung Phần) என வியட்நாமியக் குடியரசால் வழங்கப்பட்டது; பிரெஞ்சு இந்தோசீன அரசு தன் மூன்று வியட்நாம் மண்டலங்களில் ஒன்றாக திரங்கை , ஆன்னம் (பிரெஞ்சுக் காப்பிடம்) என்பவற்றை அழைத்தது.
பாவொ தாய் எனும் வியட்நாமிய அரசன் 1945 இல் ஆக்காணத்தைவிட உயர் ஆட்சிப் பிரிவை உருவாக்கியபோது நடுவண் வியட்நாமுக்குத் திரங்கைக்கு மாற்றாக திரங் போ எனும் பெயரைப் பயன்படுத்தினான். பின்னர் பிரெஞ்சு ஆட்சிய்ல் இது மீண்டும் திரங்கையாக மாற்றப்பட்டது. இப்பெயர் வியட்நாம் மக்கள் குடியரசாலும் மக்களாலும் பயன்பாட்டில் இன்றும் கூட வழங்கப்பட்டு வருகிறது.
நடுவண் வியட்நாமில் மூன்று ஆட்சிசார் வட்டாரங்களும் 19 முதல் அடுக்கு ஆட்சி அலகுகளும் அமைகின்றன.
ஆட்சிசார் வட்டாரம் | முதல் அடுக்கு ஆட்சி அலகுகள் | பரப்பளவு (கிமீ²) | மக்கள்தொகை (2015)[1] | மக்கள்தொகை அடர்த்தி (people/ km²) |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|
நடுவண் வடக்குக் கடற்கரை (பாசு திரங் போ) |
காதின் |
51,455.60 | 10,472,900 | 203.53 | குறுகிய நடுவன் வியட்நாமின் வடக்கு அரைப்பகுதியில் உள்ள கடற்கரை மாகாணங்களை உள்ளக்க்குகிறது. இவை கிழக்கில் கடற்கரையொ இருந்து மேற்கில் இலாவோசு வரை நீள்கின்றன. |
நடுவண் தெற்குக் கடற்கரை (துயேங்கை நாம்திரங் போ) |
பின் தின் |
44,376.80 | 9,185,000 | 206.98 | நடுவண் வியட்நாமின் தென்னரைப் பகுதியில் உள்ள மாகாணங்களை உள்ளடக்குகிறது. ஒரு மாக்காணம் மட்டும் இலாவோசின் எல்லையில் அமைகிறது. |
நடுவண் மேட்டுச் சமவெளி (தாய் நிகுயேன்) | 54,641.00 | 5,607,900 | 102.63 | தெற்கு நடுவண் வியட்நாமின் மலை மாகாணங்களை உள்ளடக்குகிறது. இந்த வட்டாரத்தில் பல சிறுபான்மை பழங்குடி இனக்குழு மக்கள் வாழ்கின்றனர். ஒருமாகாணம் வியட்நாம்-இலாவோசு எல்லையிலும் நான்கு கம்போடியா எல்லையிலும் கோன் தும் மாகாணம் இலாவோசு-கம்போடியா எல்லையிலும் அமைகின்றன. |
^† நகராட்சி (தான்போதிரூசு துவோசுதிரங் உவோங்)
இப்பகுதியின் 19 முதல் அடுக்கு ஆட்சி அலகுகளில் ஒன்று நகராட்சி ஆகும்; எஞ்சிய 18 மாகாணங்கள் ஆகும்.