நட்பு | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | அமீர்ஜான் |
தயாரிப்பு | வீரலட்சுமி கம்பைன்ஸ் |
கதை | வைரமுத்து |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் ஸ்ரீ பாரதி ராதாரவி |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நட்பு (Natpu) என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், சிறீபிரியா, ராதாரவி, காந்திமதி ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்தின் கதை வசனம் வைரமுத்து.[2] இப்படத்தின் கதையை வைரமுத்து எழுத அமீர்ஜான் இயக்கினார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் 11 ஏப்ரல் 1986 அன்று வெளியானது.[3] இரண்டு சினிமா எக்பிரஸ் விருதுகளைப் பெற்றது.
ஆற்றின் அருகே ஒரு கிராமம் உள்ளது கிராமத்துக்குச் செல்லவேண்டுமானால் ஆபத்தான அந்த ஆற்றைக் கடந்தே செல்லவேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி பலர் உயிரிழக்கின்றனர். இதனால் இந்த கிராமத்துக்கு பாலம் அமைக்கவேண்டி மக்கள் முயற்சிக்கின்றனர். இந்த கிராமத்துக்குப் பாலம் வந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்கள் என்பதால் அதை வரவிடாமல் ஒரு அரசியல்வாதி தடுக்க முயல்கிறார். இந்த அரசியல்வாதிக்கும் அந்த ஊர் மக்களுக்குமான போராட்டத்தைச் சித்தரிக்கும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார்.[4][5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "உன்னைக் காணா" | பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா | 4:47 | |||||||
2. | "சிங்கம் ரெண்டும்" | மலேசியா வாசுதேவன், எஸ். என். சுரேந்தர் | 4:42 | |||||||
3. | "அடி மாடி வீட்டு மானே" | பி. ஜெயச்சந்திரன், ஷோபா சந்திரசேகர் | 4:39 | |||||||
4. | "அதிகாலை சுப வேளை" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:36 | |||||||
5. | "ஆசை வச்சேன்" | பி. சுசீலா | 4:40 | |||||||
மொத்த நீளம்: |
23:24 |
7வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளில், செந்தில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெற்றார். மேலும் ராதா ரவிக்கு "சிறப்பு விருது" கிடைத்தது.[6][7]
{{cite web}}
: External link in |publisher=
(help)