மகா தேரர் நந்தன் | |
---|---|
நந்தன் தன் மனைவியைத் துறந்து புத்தரின் சீடராதல் | |
சுய தரவுகள் | |
பிறப்பு | |
சமயம் | பௌத்தம் |
தேசியம் | ![]() |
பெற்றோர் | சாக்கிய அரசர் சுத்தோதனர் - மகாபிரஜாபதி கௌதமி |
Occupation | பிக்கு |
பதவிகள் | |
Teacher | கௌதம புத்தர் |
நந்தன், பௌத்த பிக்கு (Nanda (Buddhist), கௌதம புத்தரின் ஒன்று விட்ட சகோதரனும், சுத்தோதனர் - மகாபிரஜாபதி கௌதமி இணையரின் மகனும் ஆவார். இவரது சகோதரி இளவரசி நந்தா ஆவார்.
புத்தர் ஞானம் அடைந்த பின் மகாபிரஜாபதி கௌதமி மற்றும் பிக்குணி நந்தாவும் புத்தரின் சீடர்களாகிய பின்னர் இவரும் புத்தரின் சீடராகி பின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.
புத்தர் ஞானம் அடைந்து ஏழ ஆண்டுகள் கழித்து, தான் பிறந்த கபிலவஸ்து அரண்மனைக்குச் சென்றார். மூன்றாம் நாள் புத்தர் அரண்மனையை விட்டு திரும்புகையில், அப்போது நந்தாவிற்கு ஜனபத நாட்டு இளவரசி கல்யாணியுடன் திருமணம் நடந்து சில மாதங்களே ஆகியிருந்த நிலையில், நந்தா புத்தரை தொடர்ந்து சென்று புத்தரிடம் துறவற தீட்சை பெற்று சீடரானர். [1]