நந்தமூரி ஹரிகிருஷ்ணா Nandamuri Harikrishna | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா | 2 செப்டம்பர் 1956
இறப்பு | நல்கொண்டா, தெலுங்கானா, இந்தியா | 29 ஆகத்து 2018 (aged 61)
இறப்பிற்கான காரணம் | வாகன விபத்து |
இருப்பிடம் | ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா |
பணி | அரசியல்வாதி, நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1967–1970; 1974–2005 |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் |
பெற்றோர் | என். டி. ராமராவ் பசாவராமா |
வாழ்க்கைத் துணை | இலட்சுமி (1973 சாலினி |
பிள்ளைகள் | ஜானகி ராம்[1] கல்யாண் ராம்<br /சுகாசினி ஜூனியர் என்டிஆர் |
உறவினர்கள் | நந்தமூரி பாலகிருஷ்ணா (சகோதரர்) நா. சந்திரபாபு |
நந்தமூரி ஹரிகிருஷ்ணா (Nandamuri Harikrishna, 2 செப்டம்பர் 1956 – 29 ஆகத்து 2018) தெலுங்குத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் முன்னாள் ஆந்திரா முதல்வரும் நடிகருமான என். டி. ராமராவின் மகன் ஆவார்.[2]
ஹரிகிருஷ்ணா 1964 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதல் படம் சிறீ கிருஷ்ணாவதாரம். இதில் இவர் கிருஷ்ணனாக நடித்தார்.[3] இவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான நந்தி விருது ஆந்திர அரசினால் வழங்கப்பட்டது. இவர் 1996-99 காலப்பகுதியில் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். 1996 இல் சாலைப் போக்குவரத்து மாநில அமைச்சராகப் பணியாற்றினார். 2008-இல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.[2] இவர் 2018 ஆகத்து 29 இல் சாலை விபத்து ஒன்றில் தனது 61-வது அகவையில் உயிரிழந்தார்.[4][5]