நந்தா ஏரி (Nanda lake) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள ராம்சர் சதுப்பு நிலமாகும். இந்த ஈரநிலம் 0.42 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] தெற்கு கோவா மாவட்டத்தில் கர்கோரம் நகரத்தில் இந்த ஈரநிலம் 0.42 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. நந்தா ஏரி கோவாவின் முதல் மற்றும் ஒரே ராம்சார் ஈரநில தளமாகும்.[2]
2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகளின் கீழ் 2021 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நந்தா ஏரியை ஈரநிலமாக அறிவித்தது.[2] 2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆறாம் தேதியன்று நடைபெற்ற 2022 ராம்சர் மாநாட்டில் ராம்சர் ஈரநில தளமாகவும் அறிவிக்கப்பட்டது.[1]
சிவப்பு-மூக்கு ஆள்காட்டி, வெள்ளை அறிவாள் மூக்கன், தாமிர இறக்கை இலைக்கோழி, செம்பருந்து, சிறு நீல மீன்கொத்தி, கம்பிவால் தகைவிலான், வெண் கொக்கு, சின்ன நீர்க்காகம், சிறிய சீழ்க்கைச்சிரவி போன்ற பறவையினங்களுக்கு நந்தா ஏரி தாயகமாக உள்ளது.[2]