நந்தி திம்மண்ணா

நந்தி திம்மண்ணா ( Nandi Thimmana ) (பொ.ச. 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகள்) ஒரு பிரபலமான தெலுங்குக் கவிஞரும் விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனின் அரசவையிலிருந்த அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகவும் இருந்தார். ஒரு பெண்ணின் மூக்க்கைப்பற்றிய இவரது புகழ்பெற்ற கவிதைக்குப் பிறகு இவர் பெரும்பாலும் மூக்கு திம்மண்ணா என்று அழைக்கப்படுகிறார்.

சுயசரிதை

[தொகு]

திம்மண்ணா அனந்தபூரைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. சிங்கண்ணா மற்றும் திம்மாம்பா ஆகியோருக்கு பிறந்தார். அவர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயனின் மனைவி திருமலை தேவியின் தந்தையின் ஆளுகையிலிருந்த ஒரு துணைப்பகுதியான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வாழ்ந்தார். "பாரிஜாதாபஹரணம்" என்பதை எழுதி கிருஷ்ணதேவராயனுக்கு அர்ப்பணித்தார். கிருஷ்ணதேவராயனின் மூத்த மனைவியான திருமலாதேவியின் குடும்பத்தினரின் பரிசாக கவிஞர் அரசவைக்கு வந்ததாக பாரம்பரியம் கூறுகிறது. [1]

இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். ஆயினும் இவரது சில படைப்புகள் ஏகாதிபத்திய ஆதரவின் காரணமாக வைணவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவரது மாமாக்கள் நந்தி மல்லையா மற்றும் கண்ட சிங்கண்ணா (மலைய மாருதன் என்று அழைக்கப்படுபவர்) கிருஷ்ணதேவராயனின் ஒன்றுவிட்ட சகோதரரான வீரநரசிம்ம ராயனின் அரசவையில் ஒரு பிரபலமான கவிஞர்களாக இருந்தனர்

திம்மண்ணா கன்னட கவிஞர் குமாரவியாசனின் முழுமையற்ற படைப்பான மகாபாரதத்தை நிறைவுசெய்து, அதை "கர்நாடக கிருஷ்ணதேவராய பாரத கதாமஞ்சரி" என்று மன்னருக்கு அர்ப்பணித்தார். [2]

குறிப்புகள்

[தொகு]
  1. "Classical Telugu Poetry". publishing.cdlib.org.
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 31 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-10-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)