நந்திகள்ளி Nandihalli | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 15°43′43″N 74°33′20″E / 15.72861°N 74.55556°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெல்காம் |
வட்டம் (தாலுகா) | பெல்காம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,179 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
நந்திகள்ளி (Nandihalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் பெல்காம் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1]
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவலின்படி நந்திகள்ளி கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 597749 ஆகும். கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 1543.57 எக்டேராகும். நந்திகள்ளி கிராமம் பெல்காமில் இருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது நந்திகள்ளி கிராமத்தின் மாவட்ட மற்றும் துணை மாவட்டத் தலைமையகமாகும்.
நந்திகள்ளியின் மொத்த மக்கள் தொகை 3,234 ஆக இருந்தது. இதில் ஆண் மக்கள் தொகை 1,692 ஆகவும், பெண் மக்கள் தொகை 1,542 ஆகவும் இருந்தது. கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 66.82%, இதில் 74.53% ஆண்களும் 58.37% பெண்களும் கல்வியறிவு பெற்றிருந்தனர். சுமார் 707 வீடுகள் இங்கிருந்தன.[2]