நந்திகிராம்

நந்திகிராம்
நகர்புறம்
நந்திகிராம் is located in மேற்கு வங்காளம்
நந்திகிராம்
நந்திகிராம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நந்திகிராமத்தின் அமைவிடம்
நந்திகிராம் is located in இந்தியா
நந்திகிராம்
நந்திகிராம்
நந்திகிராம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°01′N 87°59′E / 22.01°N 87.99°E / 22.01; 87.99
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கிழக்கு மிட்னாபூர்
பரப்பளவு
 • மொத்தம்2.5577 km2 (0.9875 sq mi)
ஏற்றம்
6 m (20 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,803
 • அடர்த்தி2,300/km2 (5,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுWB
மக்களவைத் தொகுதிதம்லுக் மக்களவைத்ட் தொகுதி
சட்டமன்றத் தொகுதிநந்திகிராம் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்purbamedinipur.gov.in

நந்திகிராம் (Nandigram) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பு நகரம் ஆகும். இது நந்திகிராம் ஊராட்சி ஒன்றியம் எண் 1-இல் அமைந்துள்ளது.[1]

மேற்கு வங்காள அரசு 2007-ஆம் ஆண்டில் நந்திகிராம் பகுதியை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்தை அடுத்து, சலீம் தொழில் நிறுவனத்தினர் நந்திகிராம் பகுதியில் பெரிய வேதியியல் தொழிற்சாலையை நிறுவ முற்பட்டது.[2] நந்திகிராமில் வேதியியல் தொழிற்சாலையை நிறுவுவதற்கு எதிராக உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தினர். போராட்டத்தை அடக்க காவல் துறையினர் பொதுமக்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[3] [4]பின்னர் நந்திகிராமில் வேதியியல் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நந்திகிராம் 1,225 வீடுகளையும், 5,83 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் ஆண்கள் 2,947 (51%) மற்றும் பெண்கள் 2,856 (49%) ஆக உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 725 அக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.85% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 59.37%, இசுலாமியர் 40.32% மற்றும் பிற சமயத்தினர் 0.21% ஆகவுள்ளனர்.[5]

போக்குவரத்து

[தொகு]

நந்திகிராமத்திற்கு வடகிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துறைமுக நகரமான ஹல்டியா செல்வதற்கு படகுப்போக்குவரத்து மட்டும் உள்ளது.[6]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Haldia Development Authority". Archived from the original on 31 October 2006. பார்க்கப்பட்ட நாள் 5 January 2007.
  2. "The Telegraph - Calcutta : Frontpage Story on Nandigram". Archived from the original on 2010-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.
  3. "2007-Nandigram violence: A state of failure" (in en). 28 December 2009 இம் மூலத்தில் இருந்து 15 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191015205327/https://www.indiatoday.in/magazine/cover-story/story/20091228-2007-nandigram-violence-a-state-of-failure-741632-2009-12-24. 
  4. "CBI clean chit to Buddha govt on Nandigram firing". The Times of India. Archived from the original on 5 January 2017. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
  5. Nandigram Population Census 2011
  6. Subhendu Ray, Kanchan Chakraborty and Kartik Panda (7 May 2007). "Without the ferry, Nandigram remains cut off". Indian Express. Archived from the original on 5 July 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.