நந்திதா சாகா Nandita Saha | |
---|---|
பிறப்பு | சிலிகுரி, இந்தியா |
பதக்கத் தகவல்கள் |
நந்திதா சாகா (Nandita Saha) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மேசைப்பந்தாட்ட வீராங்கனையாவார். 2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கனடாவை தோற்கடித்து இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய மூவரில் இவரும் ஒரு பகுதியாக இருந்தார்.[1][2][3][4][5][6] 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற மூத்த தேசிய மேசைப்பந்தாட்ட வெற்றியாளர் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். தேசிய வெற்றியாளர் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பல்வேறு உலக வெற்றியாளர், ஆசிய வெற்றியாளர் போட்டி, காமன்வெல்த் வெற்றியாளர் போட்டி, தெற்காசிய கூட்டமைப்பு வெற்றியாளர் விளையாட்டுகளில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2002 இல் மான்செஸ்டர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தற்போது இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)