நந்தினி அகசாராதனிநபர் தகவல் |
---|
பிறப்பு | 7 ஆகத்து 2003 (2003-08-07) (அகவை 21) |
---|
விளையாட்டு |
---|
நாடு | இந்தியா |
---|
நிகழ்வு(கள்) | தடகளம் |
---|
|
---|
நந்தினி அகசாரா (பிறப்பு 7 ஆகஸ்ட் 2003) ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தடகள அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹெப்டத்லான் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
நந்தினியின் சிறந்த போட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- 2023: சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தடகள அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹெப்டத்லான் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2] செப்டம்பர் 30 அன்று ஹாங்சோவ் ஆசிய விளையாட்டு ஹெப்டத்லான் நிகழ்வில் 200 மீட்டரில் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை நிகழ்த்தினார்.
- 2022: அக்டோபரில், பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த தேசிய ஓபன் தடகள சாம்பியன் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
- 2022: ஆகஸ்டில், கொலம்பியாவின் காலி, பாஸ்குவல் குரேரோ மைதானத்தில் நடந்த உலக தடகள இருபது வயதிக்குட்பட்டோர் சாம்பியன் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ஏழாவது இடத்தைப் பிடித்து, இருபது வயதுக்குட்பட்டோருக்கான புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.
- 2021: ஜூன் மாதம், பாட்டியாலாவில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.