நபா குமார் டோலி | |
---|---|
![]() 2017 திசம்பரில் நபா குமார் டோலி | |
அசாம் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 மே 2011 | |
முன்னையவர் | பரத் நாரா |
தொகுதி | தகுவாகானா |
பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி (தனி பொறுப்பு), கலாச்சார விவகாரங்கள் (தனி பொறுப்பு), சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மாநில அமைச்சர். | |
பதவியில் 24 மே 2016 – 10 மே 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 சூலை 1971 தகுவாகானா, லக்கிம்பூர் மாவட்டம், அசாம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2015-முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | அசாம் கண பரிசத் (2015 வரை) |
துணைவர் | கராபி பெகு டோலி |
பிள்ளைகள் | 1 |
பெற்றோர் | பரமானந்த டோலி (தந்தை) புசுபலதா டோலி (தாய்) |
நபா குமார் டோலி (Naba Kumar Doley) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாவார். 1971 ஆம் ஆண்டு சூல மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் தகுகானா தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2016 ஆம் ஆண்டில் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சரானார். முன்னதாக இவர் அசாம் கண பரிசத் கட்சியில் இருந்தார்.[3] அசாம் கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.[4][5]