నభా నటేష్ | |
---|---|
பிறப்பு | 1995/1996 (அகவை 28–29)[1] |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2015–தற்போது வரை |
நபா நடேஷ் (Nabha Natesh) ஓர் இந்திய நடிகையாவார். இவர் குறிப்பாக தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் தோன்றி வருகிறார்.[2][3] வஜ்ரகயா (2015), என்ற கன்னடப் படத்தில் சிவ ராஜ்குமார் இணையாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.[4][5] ஊடகங்களாலும் தெலுங்குத் திரையுலகிலும் இவர் பிரபலமாக ஸ்மார்ட் பியூட்டி என்று குறிப்பிடப்படுகிறார்.[6][7]
நபா, தனது சொந்த ஊரான சிருங்கேரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் கர்நாடகாவின் உடுப்பியில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் படித்தார். தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரகாஷ் பெலவாடியின் கீழ் நாடகங்களில் நடிப்பதோடு விளம்பர மாதிரியாகவும் தொடங்கினார். நன்கு பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞரான இவர் பள்ளியிலும் கல்லூரி நாட்களிலும் பல போட்டிகளில் நடனமாடியுள்ளார். பெமினா மிஸ் இந்தியா பெங்களூர் 2013 என்ற போட்டியின் முதல் 11 பேர் பட்டியலில் ஒருவராக இருந்தார். மேலும், மிஸ் இன்டெலக்சுவல் விருதையும் பெற்றார். அபிநய தரங்காவில் நடிப்பு பயிற்சி பெற்ற இவரது நாடக வாழ்க்கை பிரகாஷ் பெலவாடியின் கீழ் தொடங்கியது.[8]
இவர் தனது 19வது வயதில்[9] கன்னட நடிகர் சிவ ராஜ்குமாருக்கு இணையாக நடித்தார். இவரது நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான வஜ்ரகயா திரைப்படம் கர்நாடகாவில் பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் திரையிடப்பட்டது.[10][11][12][13][14] நபா விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சன மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். விமர்சகர்கள் நாபாவின் நடிப்பைப் பாராட்டினர்.[15][16][17][18] மேலும் இவர், கன்னடத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[19]
2017இல், சுமந்த் ஷைலேந்திராவுக்கு இணையாக லீ என்ற படத்தில் நடித்தார். அதே ஆண்டில் சஹேபா படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் தோன்றினார்.[20]
{{cite web}}
: |last=
has numeric name (help)CS1 maint: unrecognized language (link)
Shivarajkumar, who recently turned 53, is all set to romance a 19 year old heroine in his latest film Vajrakaya
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நபா நடேஷ்