நமீப் பாலைவன வண்டு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெனிபிரியோனிடே
|
பேரினம்: | '’இசுடெனோகாரா
|
இனம்: | இசு. கிராசிலிப்பிசு
|
இருசொற் பெயரீடு | |
இசுடெனோகாரா கிராசிலிப்பிசு சாலியிர், 1835 |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள நமீப் பாலைவனத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு வகை வண்டு இசுடெனோகாரா கிராசிலிப்பிசு (Stenocara gracilipes) ஆகும். நமீப் பாலைவனம் உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆண்டிற்கு சுமார் 1.4 சென்டிமீட்டர்கள் (0.55 அங்) மழை மட்டுமே பெய்கிறது. இச்சூழலில் அதிகாலை மூடுபனியிலிருந்து புடைப்பு நிறைந்த மேற்பரப்பு மூலம் தண்ணீரைச் சேகரித்து இவ்வண்டு உயிர்வாழ்கிறது.
தண்ணீரைக் குடிக்க, இசு. கிராசிலிப்பிசு தன்னுடைய நீண்ட, சுழல் கால்களைப் பயன்படுத்தி சிறிய மணல் மணலில் உடலினை 45° கோணத்தில் நிறுத்தி நிற்கும். வண்டின் கடினப்படுத்தப்பட்ட இறக்கைகளில் மூடுபனி துளிகளை ஈர்க்கிறது. மூடுபனியிலிருந்து நீரை இதன் இறக்கைகள் சேகரிக்கிறது. இங்கு நீர்த்துளிகள் ஹைட்ரோஃபிலிக் (நீர்-ஈர்ப்பு) புடைப்புகளில் ஒட்டிக்கொள்கின்றன. இவை மெழுகு போன்ற, ஹைட்ரோபோபிக் பகுதிகளால் சூழப்பட்டுள்ளன. மாற்றி மாற்றி அமைக்கப்பட்ட நீர் ஈர்ப்பு பண்பு காரணமாக இந்த வண்டு நீரைச் சேகரிக்கின்றது. இதில் சேகரிக்கப்படும் தண்ணீரை இந்த வண்டுகள் அருந்துகின்றன.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஹைட்ரோபோபிக் மற்றும் ஹைட்ரோஃபிலிக் பொருட்கள் அடுத்தடுத்து அமையுமாறு கடினமான மேற்பரப்பை உருவாக்கி காற்றிலிருந்து ஈரப்பதத்தைப் பிரித்தெடுக்கும் [1] அமைப்பு மற்றும் மூடுபனி இல்லாத ஜன்னல்கள் மற்றும் கண்ணாடியை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டுள்ளனர். என்.பி.டி நானோ என்ற நிறுவனம் இத் தொழில் நுட்பத்தை வணிக மயமாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.[2][3]
சமீபத்தில், இந்த வண்டுகள் பனியிலிருந்து தண்ணீரைப் பெறக்கூடும் (அதாவது மூடுபனி இல்லாத ஈரப்பதமான காற்றிலிருந்து) எனவும் அறியப்பட்டது. [4] [5] [6]