நம்பியாறு தமிழகத்தின் தென்பகுதியில் பாயும் ஓர் ஆறு. இது திருநெல்வேலி மாவட்டத்தின் நான்குநேரி வட்டத்தினூடாகப் பாய்கிறது. இது 45 கிலோமீட்டர் நீளமுடைய ஒரு சிறு ஆறு. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிப் பாய்கிறது.
பரட்டையாறு, தாமரையாறு ஆகியன இதன் துணையாறுகள் ஆகும். மகேந்திரகிரி மலையின் அடிவாரத்தில் இவ்விரு ஆறுகளும் சேர்கின்றன.