நயன்ஜோத் லாகிரி | |
---|---|
தேசியம் | இந்தியர் |
துறை | வரலாறு |
பணியிடங்கள் | அசோகா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி |
அறியப்படுவது | தொல்லியல் துறைப் பணிகள் |
விருதுகள் | ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ், இன்ஃபோசிஸ் பரிசு |
நயன்ஜோத் லஹிரி (Nayanjot Lahiri) என்பவர் பண்டைய இந்தியா குறித்த வரலாற்றாசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும் ஆவார். இவர் அசோகா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார். [1] [2] இவர் முன்பு தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் ஆசிரியராக இருந்தார். [3]
தொல்லியல் துறையில் இவரது பணிக்காக வாழ்வியல் புலத்தில் 2013 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் பரிசைப் பெற்றார். மேலும் இவரது "அசோகா இன் ஏன்சியண்ட் இந்தியா" என்ற புத்தகத்திற்காக 2016 ஆம் ஆண்டு ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் பரிசைப் பெற்றார். [4] இவர் 2017 முதல் 2018 வரை இன்ஃபோசிஸ் பரிசுக்கான வாழ்வியல் புலங்கள் நடுவர் குழுவில் பணியாற்றினார். [5]
இவரது புத்தகங்களில் தி ஆர்க்கியாலஜி ஆஃப் இந்தியன் டிரேட் ரூட்ஸ் (1992), ஃபைண்டிங் ஃபார்காட்டன் சிட்டீஸ் (2005), அசோகா இன் ஏன்சியன்ட் இந்தியா (2015) ஆகியவை அடங்கும். இவர் தி டெக்லைன் அண்ட் ஃபால் ஆஃப் தி இண்டஸ் சிவிலைசேசன் (2000) மற்றும் தி ஆர்க்கியாலஜி ஆஃப் ஹிந்துயிசம் (2004) என்ற உலக தொல்லியல் இதழில் எழுத்துப் பணிகளை மேற்கோண்டுள்ளார். [6]