நரி வெங்காயம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | நரி |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/நரிந. வெங்காயம்
|
இருசொற் பெயரீடு | |
நர வெங்காயம் (Roxb.) Jessop |
நரி வெங்காயம் அல்லது காட்டு வெங்காயம் (Drimia indica) என்பது தெற்காசியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் காணப்படும் பூக்கும் தாவர இனமாகும்.[1] இதற்கு காட்டு வெள்ள வெங்காயம், கோழி வெங்காயம், விரல்கலாங்கிழங்கு என்று வேறு பல பெயர்களாளும அழைக்கப்படுகிறது.
நரி வெங்காயமானது பல்புகள் இருந்து வளரும் ஒரு பெரின்னியல் சிறு செடி ஆகும். இது 1-2.5 செ.மீ. சுற்றளவில் 15-30 செ.மீ. நீளமுள்ளதாக இருக்கும். முன் வசந்த காலத்தில் இதில் மலர்கள் காணப்படும். தனி விதைகள் கருப்பு நிறத்திலும் தட்டையான நீள்வட்டவடிவமானது. பார்ப்பதற்கு அசல் வெங்காயத்தைப் போலவே காட்சி அளிக்கும் இதை அதிக நேரம் கையில் வைத்திருந்தால் கையில் அரிப்பு ஏற்படும். இது அதிக நச்சுத் தன்மை கொண்டதாகும். இது அரிய வகை மூலிகைத் தாவரமாகும். இது சித்த மருத்துவம், ஆயுர்வேதிக், நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்தப் படுகிறது.
இது தமிழகத்தின் பல பகுதிகளில் மலைகள் மற்றும் தரிசு நிலங்களில் தானாக வளரக்கூடியது. குறிப்பாக தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களளின் மலைகளில் அதிகமாக காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தூத்துக்குடி தீவுகளில் இந்த காட்டு வெங்காயம் காணப்படுகின்றது.