கர்னல் நரேந்திர குமார் | |
---|---|
வேறு பெயர்(கள்) | Narinder Sharma, Bull |
பட்டப்பெயர்(கள்) | காளை |
பிறப்பு | இராவல்பிண்டி, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 8 திசம்பர் 1933
இறப்பு | திசம்பர் 31, 2020 (அகவை 87)
தில்லி, இந்தியா |
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1954–1984 |
தரம் | கர்னல் |
தொடரிலக்கம் | IC-6729 |
படைப்பிரிவு | குமாவுன் ரெஜிமெண்ட் |
போர்கள்/யுத்தங்கள் | மேகதூது நடவடிக்கை |
விருதுகள் |
கர்னல் நரேந்திர குமார் (Colonel Narendra Kumar), (பிறப்பு: 8 டிசம்பர் 1933 - 31 டிசம்பர் 2020) ஒரு இந்தியத் தரைப்படை அதிகாரியும் மற்றும் மலையேற்ற வீரரும் ஆவார்.[1][2] அவர் இமயமலை, காரகோரம் மற்றும் பிர் பாஞ்சல் மலைத்தொடர்களில் தனது மலையேற்றங்களுக்குப் பெயர் பெற்றவர்.[3][4]சியாச்சின் பனி மலையில் இவர் மேற்கொண்ட உளவு முயற்சிகளால், 1984ம் ஆண்டில் இந்திய இராணுவம் மேற்கொண்ட மேகதூது நடவடிக்கையால் இந்திய இராணுவம் சியாச்சின் பனிப்பாறையின் முன்னோக்கி நிலைகளை பாகிஸ்தானிடமிருந்து மீட்டெடுத்தது. 1965ல் முதல் இந்திய எவரெஸ்டு மலையேற்றக் குழுவினருக்கு நரேந்திர குமார் துணைத்தலைவராக செயல்பட்டார்.
நரேந்திர குமார் 1950ல் இந்தியத் தரைப்படையில் அதிகாரியாக சேர்ந்து, தேராதூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் பயிற்சி பெற்றார். பயிற்சி காலத்தில் தனக்கு மூத்தவரான சுனித் பிரான்சிஸ் ரோட்ரிக்ஸ் மற்றும் அகாதமியின் தலைமைத் தளபதிக்கு எதிரான குத்துச்சண்டைப் போட்டியில் வென்றதால் காளை எனப்பெயர் எடுத்தார்.[5][10] இராணுவ அகாதமியில் பயிற்சி முடித்த நரேந்தி குமார் இந்திய இராணுவத்தின் குமாவோன் ரைபிள்ஸ் பிரிவில் 6 சூன் 1954 அன்று இரண்டாவது லெப்டினண்டாக நியமிக்கப்பட்டார்.[5] 6 சூன் 1956ல் லெப்டினண்டாக பதவி உயர்வு பெற்றார். இப்பபடைப்பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில், அவர் குளிர்கால விளையாட்டு மற்றும் மலையேற்றப் போட்டிகளில் பங்கெடுத்தார்.
1958ம் ஆண்டில், டார்ஜிலிங்கில் உள்ள இமயமலை மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தில் டென்சிங் நோர்கேயின் கீழ் மலையேற்றப் பயிற்சியை முடித்தார்.[6]
போர் இல்லாத அமைதிக் காலத்தில் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்படும் கீழ் கண்ட பதக்கங்களை நரேந்திர குமார் பெற்றார்.[7]