நரேஷ் ஐயர் | |
---|---|
நரேஷ் ஐயர் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | நரேஷ் ஐயர் |
பிறப்பு | 3 சனவரி 1981 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இசைத்துறையில் | 2005 முதல் தற்போது வரை |
இணையதளம் | www |
நரேஷ் ஐயர் (Naresh Iyer) சனவரி 3, 1981 ) இந்தியத் திரைப்படப் பாடகர் ஆவார். நரேஷ் ஐயர் பல இந்திய மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். 2006iஇல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ரங் தே பசந்தி என்றத் திரைப்படத்தில் இருந்து "ரூபாரூ" என்ற படத்தில் பாடிய பாடல் பல வாரங்களுக்கு இசை வரிசையில் முதலிடம் பிடித்து ,இவருக்கு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுத் தந்தது. [சான்று தேவை] ஆர்.டி. பர்மன் இசை திறமை பிரிவிலும் பிலிம்பேர் விருது பெற்றார். அறிமுக ஆண்டுகளில் பிலிம்பேர் விருது மற்றும் தேசிய விருதை பெற்ற ஒருசில பின்னணி பாடகர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
நரேஷ் ஐயர் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி சங்கர் ஐயர் மற்றும் ராதா என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார், மும்பை, மாதுங்காவில் வளர்ந்தார். இவருக்கு நிஷா ஐயர் என்ற இளைய சகோதரி இருக்கிறார். இவர் ஒரு சுயசிந்தனை நிபுணத்துவ கலைஞர் ஆவார். இவர் வணிகம் மற்றும் பொருளாதாரத்திற்கான எஸ்.இ.ஐ.எஸ் கல்லூரியில் பயின்றார். அங்கு இவர் வர்த்தகத்தில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு முடித்த பட்டையக் கணக்காளராக இருந்தார், மேலும் கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையைக் கற்றுக் கொண்டார்.
சூப்பர் சிங்கர் என்ற ஒரு இசை நிகழ்ச்சியில், இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமானால் நரேஷ் கண்டெடுக்கப்பட்டார். இவர் நிகழ்ச்சியை வெல்லவில்லை என்றாலும், பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இவருக்கு வாய்ப்பளித்தார். அன்பே ஆருயிரே என்ற படத்தில் இடம் பெற்ற 'மயிலிறகே' என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.[1] தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழி இசையமைப்பளர்களிடம் இவர் பாடியுள்ளார்.[2] நரேஷ், த்வனி என்றழைக்கப்படும் மும்பையைச் சார்ந்த ஒரு இசைக்குழுவின் பாடகராவார்.[3] வரவிருக்கும் சிறந்த ஆண் பாடகருக்கான ஆர். டி. பர்மன் விருதையும் வென்றார்.[4] அதே ஆண்டில் இவர் "ரங் டி தே பசந்தி" படத்தில் இடம் பெற்ற "ரூபாரூ" என்ற பாடலுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்றார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)