நர்க்கொண்டம் மூஞ்சூறு Narcondam Shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | கு. நர்க்கொண்டமிகா
|
இருசொற் பெயரீடு | |
குரோசிடுரா நர்க்கொண்டமிகா கமலக்கண்ணன் உள்ளிட்டோர், 2021 |
நர்க்கொண்டம் மூஞ்சூறு (Narcondam Shrew)(குரோசிடுரா நர்க்கொண்டமிகா) என்பது வெள்ளை பற்களுடைய மூஞ்சூறு ஆகும். இது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டிச் சிற்றினம்.
நர்க்கொண்டம் மூஞ்சுறு இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவு கூட்டத்தினைச் சார்ந்த நர்க்கொண்டம் தீவுகளில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரியாகும். இந்த சிறிய சுண்டெலி போன்ற மூஞ்சூறு அண்மையில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் காணப்படும் மூஞ்சூறு சிற்றினங்களின் எண்ணிக்கை 11லிருந்து 12 ஆக அதிகரித்துள்ளது.[1] இவை காட்டில் இலை அடுக்குகளில் கீழ் வாழ்கின்றன. இவற்றின் முதன்மை உணவு பூச்சிகள் ஆகும். இருசொற்பெயரிடலில் சிற்றினப்பெயரானது இந்த இனம் சேகரிக்கப்பட்ட நர்க்கொண்டம் தீவு என்பதை நினைவு படுத்தும் விதமாக வைக்கப்பட்டது.[2]