நர்த்தகி நடராஜ் (Narthaki Nataraj), தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே அமைந்த அனுப்பானடி பகுதியில், பெருமாள் பிள்ளை - சந்திராம்மாள் இணையரின் பத்து குழந்தைகளில், ஐந்தாம் குழந்தையாக நடராஜ் எனும் பெயரில் பிறந்தவர். சிறு வயதில் தன்னில் பெண்மை இருப்பதை உணர்ந்த நடராஜ், பெண்களின் உடைகளை அணியத்துவங்கினார்.
பின்னர் நர்த்தகி நடராஜ் எனும் பெயரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தமிழசைக் கலைஞர் என அறியப்பட்டார். இவர் தற்போது சென்னையில் வாழ்கிறார்.[3]
கடந்த 30 ஆண்டுகளாகளுக்கும் மேலாக பரதநாட்டியத்திற்கு தமது வாழ்வை அர்ப்பணித்துள்ள இவரது திறமையைப் பாராட்டி, இந்திய அரசு 2019-இல் பத்மஸ்ரீ விருந்து வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.[4][5]