நர்மதா | |
---|---|
பிறப்பு | ஆந்திரா [1] |
இறப்பு | 4 திசம்பர் 2012 அஹேரி, கட்சிரோலி |
தேசியம் | இந்தியன் |
அமைப்பு(கள்) | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயியம்) |
அறியப்படுவது | 'ஏ' பணிநிலைப்பிரிவு (அரசியல்) |
Criminal status | அதிரடி திடீர்த்தாக்குதலில் கொல்லப்பட்டார் |
வாழ்க்கைத் துணை | சுதாகர் |
நர்மதா அக்கா(Narmada Akka) (இறப்பு 4 டிசம்பர் 2012) என்பவர் இந்தியாவின் தடை செய்யப்பட்ட மாவோயியக் கிளர்ச்சி இயக்கமானஇந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மாவோயியம்) மூத்த அரசியல்வாதி ஆவார்.[2][3] [4][5] இவர் தான் சார்ந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார்.[6]இவர் பெண் மாவோயியவாதிகளுக்கான கொள்கைகளை வகுப்பதில் தனது கட்சியில் முக்கிய பங்கு வகித்ததாக அறியப்படுகிறது.[2]
இவர் சுதாகர் (என்ற) கிரண் என்பவரை மணந்தார். பி. சுதாகர் ஒரு மாவோயிஸ்ட் கருத்தியல்வாதியாவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மாவோயியம்) வெளியீட்டுப் பிரிவில் உறுப்பினராக பணியாற்றினார். இவர் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.[6]
நர்மதாவுக்கு ஆங்கிலம் உட்பட ஏழு மொழிகளில் சரளமாக தொடர்பு கொள்ளும் திறன் இருந்தது.[7]இவர் கல்லூரிப் படிப்பிலிருந்து இடைநின்றவர் ஆவார்.[6]தனது 18ஆம் வயதிலேயே தன்னை மாவோயிய இயக்கத்தில் சேர்ந்தார். மேலும், இவர் இந்தியாவில் மாவோயிய இயக்கத்தில் ஒரு முன்னோடி களச்செயற்பாட்டாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக காடுகளில் கழித்தார்.[2]இவரது தந்தையின் தீவிர பொதுவுடைமை சித்தாந்தத்தின் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாகவும், பொதுவுடைமை சார்ந்த கருத்தியல் உரையாடல்ககளின் காரணமாகவும், தீவிர இடதுசாரி அரசியலில் சேர நர்மதா உந்தப்பட்டார்.[2]
மேலும், தந்தையுடனான அந்த உரையாடலுக்குப் பிறகுதான், இவர் மாவோயியவாதிகள் உடன் சேர முடிவு செய்தார்.[2]இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மாவோயியம்) பிரிவின் தெற்கு கட்சிரோலி பிரிவின் செயலாளராக தீவிரமாகச் செயல்பட்டுள்ளார்.[3]அனுராதா காந்திக்குப் பிறகு, தீவிர இடது அரசியல் அமைப்பின் மத்திய குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் தோழர் ஆவார்.[6]([[கோபாத் காண்டியின்] மனைவி)[8][9]இவர் தண்டகாரண்யா பிராந்தியத்தின் புரட்சிகர ஆதிவாசி மகளிர் சங்கதன் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இது பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் மிக உயர்ந்த "பெண்கள் அமைப்புகளில்" ஒன்றாகும். அருந்ததி ராய் இந்த அமைப்பானது 90,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்.[10]மகாராஷ்டிராவில் இவருக்கு எதிராக 53 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.[3]
சத்தீசுகர் எல்லையில், தெற்கு கட்சிரோலியில், ஹைக்கர் கிராமத்திற்கு அருகில், 2012ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் நாள் மாவோயிஸ்டுகள் மற்றும் மாநில காவல் படைகளுக்கு இடையே கடுமையான ஒரு மணிநேர மோதலிற்குப் பிறகு நர்மதா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.[6]
மாவோயிஸ்டுகள் இவரது உடலுடன் தப்பிக்க மட்டுமே முடிந்திருக்கிறது; இவரது உடல் சத்தீஸ்கரின் காங்கர் மாவட்டத்தில் மால்வாடா பழங்குடி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.[6]
நர்மதா அக்காவின் இறுதிச் சடங்குகள் சத்தீஸ்கரில் உள்ள ஒரு கிராமத்தில் நடத்தப்பட்டன என்று காவல்துறை வட்டாரங்கள் கூறினாலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் இந்திய ஊடகங்களை அணுகவில்லை.[3]
Page 72: "Comrade Narmada talks about the many years she worked in Gadchiroli before becoming the DK head of the Krantikari Adivasi Mahila Sangathan." Page 76: "In 1986 it [CPI (Maoist)] set up the Adivasi Mahila Sangathan (AMS), which then evolved into the Krantikari Adivasi Mahila Sangathan and now has 90,000 enrolled members. It could well be the largest women's organization in the country."