நல் சரோவர் பறவைகள் சரணாலயம் அல்லது நல் சரோவர் (Nal Sarovar Bird Sanctuary, Nal Sarovar) இந்தியாவின், குசராத்து மாநில அகமதாபாத் நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவிலுள்ள "சனந்த் கிராமம்" அருகில் அமைந்துள்ள மிகப்பெரிய சதுப்புநில ஏரியாகும்.[1] 120.82 சதுர கிலோமீட்டர் (46.65 சதுர மைல்) சுற்றுப்புற சதுப்பு கொண்ட முதன்மை ஏரியான இவ்வேரி, 1969 ஆம் ஆண்டு, ஏப்ரலில் ஒரு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பேரேரிகளில் ஒன்றாகவும், குசராத்தின் பெரிய சதுப்புநில பறவை சரணாலயமாகவும் காணப்படும் இங்கு, பிரதானமாக குளிர் காலத்திலும், வசந்த காலத்திலும் இடம்பெயரும் பறவைகள் பெருமளவில் வசித்து வருகின்றன.[2]
{{cite web}}
: Check date values in: |date=
(help); Unknown parameter |dead-url=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)