நல்லூர் (திருநெல்வேலி)

நல்லூர்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


நல்லூர் (Nallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்[4]. இது காசியாபுரம், ஆலடிப்பட்டி, வைத்திலிங்கபுரம், சிவகாமிபுரம், அரவன்குடியிருப்பு, காமராஜ்நகர், பெரியார்நகர், ராஜீவ்காந்திநகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

இவர்களின் முதன்மையான தொழில் விவசாயம், பலசரக்கு மளிகை வியாபாரம். மேலும் அரிசி உற்பத்தி ஆலை, எண்ணெய் உற்பத்தி ஆலை, ஆடை உற்பத்தி செய்தல், திருநீர் உற்பத்தி செய்தல், தேங்காய் கொப்பறை காயவைத்தல், செங்கல் சூளை, மரவேலை என பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இங்கு உள்ள பெண்கள் பீடி சுற்றும் கைத்தொழிலை முதன்மை தொழிலாக செய்கின்றனர். காசியாபுரம் முத்தாரம்மன் கோவில் அருகே அரசு பொது அறிவு நூலகம் ஒன்று அமைந்துள்ளது.

பள்ளிகள்

[தொகு]
  • மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி
  • ஸ்ரீ வைத்திலிங்க சுவாமி உயர்நிலைப் பள்ளி
  • T. D. T. A தொடக்க நிலைப் பள்ளி
  • C. M. S தொடக்க நிலைப் பள்ளி
  • C. S. I ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.