நளன், இராமாயணம் குறிப்பிடும் வானர மன்னர் சுக்கிரீவனின் படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இலங்கை சென்று இராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்க வேண்டி, நீலனின் துணையுடனும், நளன் வானரக் கூட்டத்தின் உதவியுடனும் நளன் கடலில் இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடற்பாலம் நிறுவினான். [1][2] [1]
நளனின் தலைமையில் கடற்பாலம் கட்டப்பட்டதால், இந்த கடற்பாலத்திற்கு நள சேது என்பர்.[3]
இராம-இராவணப் போரில் நளன் பல அரக்கர்களைக் கொன்று குவித்தார். போரில் ஒரு முறை இந்திரஜித்தின் கூரிய அம்பால், நளன் பலத்த காயமடைந்து மயங்கி வீழ்ந்தான்.[4] அரக்கர் படைத்தலைவரான தபனனை, நளன் கொன்றார். [5]