வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1951 |
வேந்தர் | முனைவர். மகேசு சர்மா, சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர். |
தலைவர் | சிறீ பிரகலாத் சிங் படேல் |
துணை வேந்தர் | பேராசிரியர் பைத்யாநாத் லாப் |
அமைவிடம் | , , 25°07′42″N 85°26′44″E / 25.1282408°N 85.4455249°E |
இணையதளம் | nnm |
நவ நாளந்தா மகாவிகாரா (Nava Nalanda Mahavihara) பல்கலைக்கழகம் இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாளந்தாவின் பண்டையகால கல்விமுறையைக் புதுப்பிக்கும் நோக்கத்தில் 1951 ஆம் ஆண்டு இராசேந்திர பிரசாத் அவர்களால் இப்பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. நவ நாளந்தா பல்கலைக்கழகம் 2006 ஆம் ஆண்டில் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது [1][2][3][4].
பாளி மொழியில் ஒர் உயர் கல்வி மையம் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நவ நாளந்தா மகாவிகாரா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. மாகாவீராவின் பௌத்த சமயக் கோட்பாடுகளை வளர்க்கவும், பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் தொடர்ச்சியாக செயல்பட வேண்டுமெனவும் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் இக் கல்வி நிறுவனம் மாணவர்கள் தங்கி பயிலும் ஓர் உண்டு உறைவிட விடுதியாகவே செயல்பட்டு வந்தது. குறைந்த எண்ணிக்கையிலான இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கல்வி பயின்றனர். பிறகு 2006 ஆம் ஆண்டில் இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவால் இப் பல்கலைக்கழகத்திற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற தரம் வழங்கப்பட்டது [5].
மகாவிகாராவின் தற்போதைய பல்கலைக்கழக வளாகம் பாட்னா பெருநகரத்திலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஏரியான இந்திரபுசுகரணி ஏரியின் தென் கரையில் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. வடக்கு கரைக்கு அருகில் பழங்கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் உள்ளன. நவ நாளந்தா மகாவிகாரா 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே வேளையில் நாளந்தா பல்கலைக்கழகம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது[5].