நவரத்தன்கர் | |
---|---|
நவரத்தன்கர் கோட்டை | |
அமைவிடம் | சிசாய், கும்லா, சார்க்கண்டு, இந்தியா |
ஆள்கூற்றுகள் | 23°06′36″N 84°47′01″E / 23.10993°N 84.78367°E |
பரப்பளவு | 11 ha (27 ஏக்கர்கள்) |
கட்டப்பட்டது | 17ஆம் நூற்றாண்டு |
கட்டிடக்கலைஞர் | துர்ஜன் சால் |
நவரத்தன்கர் (Navratangarh) தோய்சாகர் எனவும் அறியப்படும் இந்நகரம் நாகவன்ஷி மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றாக இருந்தது. இப்போது இந்திய மாநிலமான சார்க்கண்டுவின்] ஓர் பகுதியாக இருக்கிறது. இது கும்லா மாவட்டத்தின் சிசாய் தொகுதியில் அமைந்துள்ளது. நாகவன்ஷி மன்னர் பைரிசால் தனது தலைநகரை குக்ராகரில் இருந்து நவரத்னகருக்கு மாற்றினார். இங்குள்ள கோட்டையை மன்னர் துர்ஜன் சால் கட்டினார் . [1] [2] [3] [4] இந்த அரண்மனை அகழிகளால் சூழப்பட்ட ஐந்து மாடி அமைப்பாக இருந்தது. மேலும், இது ஒரு அரசவை, ஒரு கருவூலம், நிலவறையுடன் ஒரு சிறைச்சாலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [5] [6]
கும்லா மாவட்டத்தின் சிசாய் தொகுதியில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இது கும்லாவிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலும் ராஞ்சியில் இருந்து 75 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. [7] [8]
இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில் மன்னன் துர்ஜன் சால் என்பவரால் கட்டப்பட்டது. முகலாய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் இக் கோட்டையை கட்ட முடிவு செய்தார். காடுகள், மலைகள் மற்றும் ஆறுகளால் சூழப்பட்டதால் நவரத்தன்கர் ஒரு மூலோபாய இடத்தில் இருந்தது. [6][9]