வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | 1976 |
நிறுவனர்(கள்) | அப்பச்சன் |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | ஜிஜோ பொன்னூஸ் ஜோஸ் பொன்னூஸ் |
தொழில்துறை | மகிழ்கலை |
உற்பத்திகள் | திரைப்படம் |
பிரிவுகள் |
|
நவோதயா ஸ்டுடியோ (Navodaya Studio) என்பது கேரளத்தின் கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய திரைப்பட படப்பிடிப்பு வளாகம் ஆகும். இது கேரளத்தின் ஆரம்பகால திரைப்பட படப்பிடிப்பு வளாகங்களில் ஒன்றாகும். இது நவோதயா அப்பச்சனால் 1976 இல் நிறுவப்பட்டது. நவோதயா இந்தியத் திரைப்படத்துறையில் முக்கியமான சில படங்களை தயாரித்ததற்காக அறியப்படுகிறது.
1976 ஆம் ஆண்டு தனது சகோதரர் குஞ்சாக்கோவின் உதயா ஸ்டுடியோவில் இருந்து பிரிந்துவந்த அப்பாச்சனால் இந்த படப்பிடிப்பு வளாகம் நிறுவப்பட்டது.
நவோதயா ஸ்டுடியோ தயாரித்த முதல் படமான கடத்தநாட்டு மக்கம் படத்தை அப்பச்சன் இயக்கினார். இரண்டாவது படமான தச்சோளி அம்பு மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ஆகும். [1] அதைத் தொடர்ந்து 70 மி.மீ. திரைப்படமாக இந்தியாவில் முழுக்க முழுக்க தயாரிக்கபட்ட படையோட்டம் இந்த நிறுவனத்தால் தயாரிக்கபட்டது. [2] இந்தியாவின் முதல் 70 மி.மீ. திரைப்படமான சோலேயின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள், ஐக்கிய இராச்சியத்தில் செய்யப்பட்டன. ஆனால் படையோட்டத்திற்கான பணிகள் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசாத் லேப்சில் செய்யப்பட்டன. [3] 1982 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான மைடியர் குட்டிச்சாத்தான் இந்நிறுவனத்தில் இருந்து வெளியானது. [4] இந்த மைல்கல் படங்கள் மட்டுமல்லாமல், நவோதயா மலையாளத்தில் தச்சோளி அம்பு, மைடியர் குட்டிச்சாத்தான், மஞ்சில் விரிஞ்ச பூக்கள், படையோட்டம், சாணக்யன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் தயாரித்தது.
படப்பிடிப்பு வளாகமானது பின்னர் 2000 ஆம் ஆண்டில் தொலைக்காட்சித் துறையின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கப்பட்டது. அப்பச்சனின் மகன்கள் ஜிஜோ பொன்னூஸ் மற்றும் ஜோஸ் பொன்னூஸ் நிறுவனத்தை ஏற்று நடத்திவருகின்றனர்.
நவோதயா ஸ்டுடியோவுடன் இணைந்து அப்பச்சனுக்கு 2011 ஆம் ஆண்டு ஜேசி டேனியல் விருது வழங்கப்பட்டது [5]