நவோமி மெக்கிளியூர் கிரிபித்சு சூலை 11, 1975 (1975-07-11) (அகவை 49) அட்லாண்டா, ஜார்ஜியா, அமெரிக்கா
வாழிடம்
ஆஸ்திரேலியா
தேசியம்
அமெரிக்கர், ஆத்திரேலியர்
பணியிடங்கள்
CSIRO
ஆஸ்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
ஓபர்லின் கல்லுரி, (கலை இளவல்)
மின்னசோட்டா பல்கலைக்கழகம்]] (முனைவர்)
ஆய்வு நெறியாளர்
ஜான் டிக்கே
அறியப்படுவது
பால்வழியின் புதிய சுருள்கையைக் கண்டுபிடித்தல்
துணைவர்
டேவிட் மெக்கானெல்
நவோமி மெக்கிளியூர் கிரிபித்சு(Naomi McClure-Griffiths) (பிறப்பு: ஜூலை 11, 1975)ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் கதிர்வானியலாளரும் ஆவார். இவர் ஆத்திரேலியாவில் இருந்து அராய்ச்சி மேற்கொள்கிறார். Iஇவர் 2004 இல் பால்வழியின் ஒரு புதிய சுருள்கையைக் கண்டுபிடித்தார். இவர் முதன்மை அமைச்சர் மால்கோல்ம் மக்கிண்டோழ்சு இயற்பியல்சார் அறிவியலாளர் பரிசை 2006 இல் பெற்றார். இவர் 2015 இல் ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழகத்தின் பவுசே பதக்கத்தை இயற்பியல் ஆராய்ச்சிக்காகப் பெற்றார்.
நவோமி மெலிசா மெக்கிளியூர் கிரிபித்சு ஜார்ஜியா மாநிலம், அட்லாண்டாவில் 1975, ஜூலை 11 அன்று பிறந்தார்.[1] இவர் 1993 இல் ஓபெர்லின் கல்லூரியில் சேர்ந்து பிரெஞ்சு மொழியும் இயற்பியலும் கற்றுத் தேறியுள்ளார். பின்னர் 1997 இல் மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் படிக்க சேர்ந்துள்ளார்.இவர் முனைவர் பட்டத்துக்குப் படிக்கும்போது பன்னாட்டுப் பால்வெளித் தள அளக்கையில் பங்கேற்றார். இது தென்பால்வெளித் தள அளக்கையாகும். இந்த அளக்கை நமது பால்வழியில் உள்ள நீரக வளிம அளவைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்டது . இவர் 2001 ஆத்திரேலையாவில் நிலைத்திருந்து வாழ ஆத்திரேலியத் தேசிய அமைப்பான CSIRO வின் போல்ட்டன் ஆய்வுநல்கையைப் பெற்று அங்கு முதுமுனைவர் ஆய்வைத் தொடர்ந்தார்.[2]
இவர் இந்த ஆய்வில் உடுக்கண வெளியின் வளிம இயக்கத்தை ஆய்வு செய்து விண்மீன்களின் வெடிப்புகளின்போது வளிமக் குமிழிகளும் கூடுகளும் உருவாகி பால்வெளியை விட்டு வளிமங்கள் வெளியே தள்ளப்படுகின்றன என்பதைக் கண்டார். இத வளிமங்களின் இயக்கத்தில் வெற்றுவெளிப் புகைக் குழல்கள் உருவாகின்றன என்பதை அறிந்து அவ்வாறான இரண்டு புகைக்குழல்களைக் கண்டுபிடித்தார்.இத்தகைய ஒரு குழலில் பால்வெளித் தளத்தின் முழுவதும் மேலும் கீழும் விரிந்து பரவியதைக் கண்டுபிடித்தார். பிறகு 2004 இல் இவர் தன் முதுமுனைவர் ஆய்வின்போது ஒரு புதிய சுருள்கையைக் கண்டறிந்தார்.[2][3] இந்த புதிய கை முந்தைய வான்படங்களில் இருந்தாலும் அது பெயரிடப்படவில்லை என்பது மட்டுமன்றி இனங்காணப்படவும் இல்லை. இவர் இதற்காக ஒரு கணினிப் படிமத்தை உருவாக்கி அது நிலவுவதையும் தன் குழு தான் அதைக் கண்டுபிடித்தமையையும் நிறுவினார்.[4]
இவர் 2006 இல் அந்த ஆண்டிற்கான இயற்பியல் அறிவியலாளருக்கு வழங்கும் மால்கோல்ம் மெக்கின்டோழ்சு பரிசைப் பெற்றார்.[5] இது அறிவியலுக்கு முதன்மை அமைச்சர் வழங்கும் பரிசுகளில் ஒன்றாகும்.[6]
> அதே ஆண்டில் முதன்மை ஆய்வாளராக வான முழுதும் உள்ள பால்வெளிகளின் அளக்கையைத் தொடங்கி வைத்தார்..[2][5] இவர் 2007 இல் சிட்னி நோக்கீட்டக பவரவுசு அருங்காட்சியகத்தின் பவரவுசு விசார்டு விருதைப் பெற்றார்.[7] இவரது குழு 2011 இல் பன்னாட்டுப் பால்வழிக் காந்தப்புல வரைவை முழுமையாக்க கலந்து கொண்டது.[8] இவர் 2015 இல் CSIRO இல் இருந்து விலகி, ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்து, மவுண்ட் சுட்டிரோமியோ நோக்கீட்டகத்தில் தன் ஆய்வைத் தொடர்ந்தார்.[7] அதே ஆண்டில் இவரது இயற்பியல் பணிகளுக்காக ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழகம் பாவ்சே பதக்கத்தை வழங்கியது.[9]
McClure-Griffiths, N. M.; Green, A. J., et. al. (April 2001). "The Southern Galactic Plane Survey: The Test Region". The Astrophysical Journal551 (1): 394–412. doi:10.1086/320095. Bibcode: 2001ApJ...551..394M.
McClure-Griffiths, N. M.; Dickey, John M., et. al. (September 2003). "Loops, Drips, and Walls in the Galactic Chimney GSH 277+00+36". The Astrophysical Journal594 (2): 833–843. doi:10.1086/377152. Bibcode: 2003ApJ...594..833M.
McClure-Griffiths, N. M.; Dickey, John M., et. al. (June 2004). "A Distant Extended Spiral Arm in the Fourth Quadrant of the Milky Way". The Astrophysical Journal607 (2): L127-L130. doi:10.1086/422031. Bibcode: 2004ApJ...607L.127M.
McClure-Griffiths, N. M.; Ford, Alyson, et. al. (February 2006). "Evidence for Chimney Breakout in the Galactic Supershell GSH 242-03+37". The Astrophysical Journal638 (1): 196–205. doi:10.1086/498706. Bibcode: 2006ApJ...638..196M.
McClure-Griffiths, N. M.; Dickey, John M. (December 2007). "Milky Way Kinematics. I. Measurements at the Subcentral Point of the Fourth Quadrant". The Astrophysical Journal671 (1): 427–438. doi:10.1086/522297. Bibcode: 2007ApJ...671..427M.
McClure-Griffiths, N. M.; Pisano, D. J., et. al. (April 2009). "Gass: The Parkes Galactic All-Sky Survey. I. Survey Description, Goals, and Initial Data Release". The Astrophysical Journal Supplement Series181 (2): 398–412. doi:10.1088/0067-0049/181/2/398. Bibcode: 2009ApJS..181..398M.
McClure-Griffiths, N. M.; Madsen, G. J., et. al. (December 2010). "Measurement of a Magnetic Field in a Leading Arm High-velocity Cloud". The Astrophysical Journal725 (1): 275–281. doi:10.1088/0004-637X/725/1/275. Bibcode: 2010ApJ...725..275M.
McClure-Griffiths, N. M.; Green, J. A., et. al. (June 2013). "Atomic Hydrogen in a Galactic Center Outflow". The Astrophysical Journal Letters770 (1): L4. doi:10.1088/2041-8205/770/1/L4. Bibcode: 2013ApJ...770L...4M.
↑"Dr Naomi McClure-Griffiths – speech". Canberra, Australia: Government of Australia Department of Industry. 25 June 2014. Archived from the original on 22 டிசம்பர் 2015. Retrieved 24 November 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)