நாகசரி உணவு | |
பரிமாறப்படும் வெப்பநிலை | சிற்றுண்டி |
---|---|
தொடங்கிய இடம் | இந்தோனேசியா |
பகுதி | மத்திய ஜாவா, யோக்யகர்த்தா |
பரிமாறப்படும் வெப்பநிலை | அறை வெப்பநிலை |
முக்கிய சேர்பொருட்கள் | அவிக்கப்பட்ட அரிசி மாவு, சர்க்கரை நிரப்பப்பட்ட வாழைப்பழம், வாழை இலை |
வேறுபாடுகள் | பச்சை, வெள்ளை, ஊதா |
நாகசரி (Nagasari)[1] என்பது சாவகத் தீவின் பாரம்பரிய வேகவைத்த அணிச்சல் உணவாகும். அரிசி மாவு, தேங்காய்ப் பால் மற்றும் சர்க்கரை முதலியவற்றை வாழைப்பழத்தில் நிரப்பி தயார் செய்யப்படுகிறது.[2]
ஜாவானீஸ் மொழியில் நாகா என்றால் "பெரிய பாம்பு; டிராகன்" என்று பொருள்.[3] இது பழைய ஜாவாவில் புராண பச்சைப் பாம்பைக் குறிக்கிறது. இது பூமிக்கு வளத்தைத் தருகிறது. நாகா என்ற சொல் சமசுகிருத சொல்லிருந்து உருவானது.<[4] சாரி என்றால் "அழகான; வளமான; அமைதியான" அல்லது "விதை; மலர்" எனப் பொருள்படும்.[3]
நாகசரி என்றால் "டிராகனின் விதை" அல்லது "அழகான டிராகன்" என்று பொருள். ஜாவானீஸ் டிராகன் பெரும்பாலும் பச்சைப் பாம்பாகச் சித்தரிக்கப்படுவதால், உணவுக்குப் பச்சை நிறம் கொடுக்கப்படுகிறது.
நாகசரி என்ற வார்த்தை 1) ஒரு குறிப்பிட்ட மரம்; 2) ஒரு குறிப்பிட்ட பாடிக் முறையினைக் குறிக்கலாம்.[3]
நாகசரி பச்சை நிறத்திலும் (மிகவும் பொதுவானது) மற்றும் வெள்ளை நிறத்திலும் (குறைவாக பொதுவானது) கிடைக்கின்றது. பச்சை நிறம் பாண்டன் இலைகள் சாற்றிலிருந்து வருகிறது. மகலாங்கில் வெள்ளை நாகசாரி லெஜண்டோ என் அழைக்கப்படுகிறது.
நவீனக் காலத்தில், மக்கள் நாகசரியினை வெவ்வேறு வண்ணங்களில் தயாரிக்கின்றனர். நீல நாகசரி, கருவிளை பூக்களிலிருந்து அதன் நீல நிறத்தைப் பெறுகிறது.
நாகசாரி பொதுவாக இந்தோனேசியப் பாரம்பரிய சந்தையில் ஜாஜன் பாசர் என விற்கப்படுகிறது.