நாகராசன் வேதாச்சலம்

நாகராசன் வேதாச்சலம்
Nagarajan Vedachalam
பிறப்புஇந்தியா
பணிவிண்வெளி விஞ்ஞானி
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
web site

நாகராசன் வேதாச்சலம் (Nagarajan Vedachalam) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார்.[1] கே.ஆர்.ராமநாதன் விண்வெளித் துறையின் புகழ்பெற்ற பேராசிரியர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புகழ்பெற்ற விஞ்ஞானி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.[2] இந்திய விண்வெளி திட்டத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டார்.[3] புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனத்திற்கான (ஜிஎஸ்எல்வி) தாழ்வெப்ப பொறி இயந்திரத்தை உருவாக்கிய நீர்ம உந்து திட்ட மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார். இசுரோவின் நூற்றுக்கும் மேற்பட்ட விண்வெளித் திட்டங்களுடன் தொடர்புடையவராக பணியாற்றியுள்ளார்.[2] இசுரோவின் ஓர் அலகின் [4] இயக்குநராக [2] உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றாலும், விண்வெளித் துறையின் பல குழுக்களில் இவர் தொடர்ந்து அமர்ந்து இருக்கிறார்.[5]

நாகராசன் வேதாச்சலத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அறிவியல் முனைவர் பட்டம் வழங்கி [3] கவுரவித்தது. இந்திய அரசும் 2003 ஆம் ஆண்டின் இறுதியில் நான்காவது உயர்ந்த இந்திய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[6]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Times of India". Times of India. 13 August 2012. Retrieved February 12, 2015.
  2. 2.0 2.1 2.2 "Coep". Coep. 2015. Retrieved February 12, 2015.
  3. 3.0 3.1 "The Hindu". The Hindu. 16 October 2009. Retrieved February 12, 2015.
  4. T. S. Subramanian (April 1999). "The men behind the mission". Frontline 16 (8). http://www.frontline.in/static/html/fl1608/16080080.htm. 
  5. "Fresh Patents". Fresh Patents. 2015. Archived from the original on பிப்ரவரி 12, 2015. Retrieved February 12, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. Retrieved February 6, 2015.