நாகா முன்செட்டி[1] (பிறப்பு: 25 பிப்ரவரி 1975) ஆங்கில மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர், செய்தி வாசிப்பாளர், செய்தியாளர் ஆவார். பிபிசியின்பிபிசி பிரேக்பாஸ்ட் நிகழ்ச்சியின் வழங்குனராக பணியாற்றுபவர். பிபிசி உலகச் செய்திகள் தொலைக்காட்சி அலைவரிசையில் வழங்குனராகவும், பிபிசி 2 தொலைக்காட்சி அலைவரிசையில் வொர்க்கிங் லஞ்ச் நிகழ்ச்சியின் வழங்குனராகவும் பணியாற்றியவர்.
தெற்கு இலண்டனின் ஸ்டீரீதம் பகுதியில் பிறந்து வளர்ந்த முன்செட்டியின் பெற்றோர் தாய், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தந்தை, மொரீசியசைச் சேர்ந்தவர்.[2][3][4] தனது தொடக்கக் கல்வியை தெற்கு இலண்டனின் டூட்டிங் மாவட்டத்திலுள்ள கிராவெனே பள்ளியில் கற்றார்.[5] லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், மொழி கற்று 1997 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.[6] முதல் பணியாக, இலண்டனிலிருந்து வெளியாகும் ஈவினிங் ஸ்டாண்டர்டு நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றினார்.[7] அதன் பிறகு தி அப்சர்வர் இதழின் வணிகச் செய்திகள் பிரிவில் பணியாற்றினார்.[7]
↑"Prominent alumni". University of Leeds. Archived from the original on 20 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 May 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)