தெலோடெர்மா (தெலோடெர்மா) நாகலாண்டென்சு ஓர்லோவ் மற்றும் பலர், 2006
நாகாலாந்து மரத் தவளை எனும் தெலோடெர்மா நாகலாண்டென்சு (Theloderma nagalandense) இராகோபோரிடே குடும்பத்தில் உள்ள தவளைசிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இரண்டு வகை வட்டாரங்களிலிருந்து இது அறியப்பட்டது. இரண்டும் நாகாலாந்து மாநிலத்தில், கடல் மட்டத்திலிருந்து 1196 மீட்டர் உயரத்தில் ஒன்றும் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1421 மீட்டர் உயரத்தில் மற்றொன்றும் என அறியப்பட்டன.[2][3][1][4]
↑Orlov, N.L.; Dutta, S.K.; Ghate, H.V.; Kent, Y. (2006). "New species of Theloderma from Kon Tum Province (Vietnam) and Nagaland State (India) [Anura: Rhacophoridae].". Russian Journal of Herpetology13 (2): 135–154. doi:10.30906/1026-2296-2006-13-2-135-154.