உத்தரப்பிரதேசத்தின்பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள மாணிக்பூரில் சையத் ஹசன் குத்துஸ் பாபா காதிரி மற்றும் பீபி பாத்திமா ஆகியோருக்கு சாகுல் அமீது பாதுஷா காத்ரி பிறந்தார். முகமது கௌஸின் வழிகாட்டுதலின் கீழ் குவாலியரில் இசுலாமியக் கல்வியைப் பெற்றார். மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ள மாலைத்தீவு, இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்குச் சென்றார்.[3] ஒரு எளிய மற்றும் புனிதமான வாழ்க்கையை நடத்தினார். ஆனால் இவரை பின்பற்றுபவர்கள் இவருக்கு நாகூர் ஆண்டவர் என்ற பெயரைக் கொடுத்து நிறைய அற்புதங்களைச் செய்ததாக நம்புகிறார்கள். இவர் மீரா சாஹிப் என்றும் அழைக்கப்பட்டார்.
பினாங்கு (மலேசியா ) மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இவரது நினைவாக கட்டப்பட்ட பிற தர்க்காக்களும் உள்ளன. சிங்கப்பூர் தர்கா கி. பி. 1827 மற்றும் 1830 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள சுலியாவில் உள்ள மஸ்ஜித் ஜேம் மற்றும் பினாங்கில் உள்ள கேரமத் தாதா கோயா ஆகியவற்றுடன் மேற்கூறிய ஆலயங்கள் நாகூர் தர்காவின் பாணியால் ஈர்க்கப்பட்டுள்ளன.
Visweswaran, Kamala (2011), Perspectives on Modern South Asia: A Reader in Culture, History, and, UK: Blackwell Publishing Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1-4051-0062-5
Raj, Selva J.; William P. Harman (2006), Dealing With Deities: The Ritual Vow in South Asia, Albany: State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-7914-6707-4.
Bayly, Susan (2003), Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society, 1700–1900/Susan Bayly, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-521-37201-1.
Feener, R. Michael; Terenjit Sevea, Institute of Southeast Asian Studies (2009), Islamic connections: Muslim societies in South and Southeast Asia, Singapore: ISEAS Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-981-230-924-2.
Visweswaran, Kamala (2011), Perspectives on Modern South Asia: A Reader in Culture, History, and, UK: Blackwell Publishing Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-1-4051-0062-5.