நாகேந்திர சிங் Nagendra Singh | |
---|---|
![]() நாகேந்திர சிங், பியாட்ரிக் இளவரசியுடன் அனைத்துலக வழக்கறிஞர்கள் சங்க மாநாட்டில், ஹேக் 1985 | |
தலைவர், அனைத்துலக நீதிமன்றம் | |
பதவியில் 1985–1988 | |
முன்னையவர் | தஸ்லீம் எலியாஸ் |
பின்னவர் | ஜோசு ரூடா |
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் 1 அக்டோபர் 1972 – 6 பிப்ரவரி 1973 | |
முன்னையவர் | எஸ். பி. சென் வர்மா |
பின்னவர் | தி. சுவாமிநாதன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | துர்க்காபூர், இராஜஸ்தான் | 18 மார்ச்சு 1914
இறப்பு | 11 திசம்பர் 1988 டென் ஹாக், நெதர்லாந்து | (அகவை 74)
தேசியம் | இந்தியன் |
முன்னாள் மாணவர் | மாயோ கல்லூரி தூய யோவான் கல்லூரி, கேம்பிரிட்ஜ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
மகாராஜ் ஸ்ரீ நாகேந்திர சிங் (Nagendra Singh)(18 மார்ச் 1914 - 11 டிசம்பர் 1988) என்பவர் இந்திய வழக்கறிஞர் மற்றும் நிர்வாகி ஆவார். இவர் 1985 முதல் 1988 வரை அனைத்துலக நீதிமன்றத்தின்[1] தலைவராக இருந்தார். ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்த இந்தியாவிலிருந்து வந்த நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர். மற்றவர்கள் பெனகல் நரசிங் ராவ் (1952–1953), ஆர்.எஸ். பதக் (1989–1991) இந்தியாவின் 18வது தலைமை நீதிபதி தல்வீர் பண்டாரி (2012–), ஆவார்கள்.[2]
சிங் இந்தியாவின் துங்கர்பூர் மாநிலத்தில் பிஜயா சிங் மற்றும் தேவேந்திர குன்வர் சாஹிபாவின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். அஜ்மீரில் உள்ள மயோ கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் அரச ராஜபுத்திர குடும்பத்தைச் சேர்ந்தவர்.[3] இந்தியக் குடிமை சேவையில் சேருவதற்கு முன்பு கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றார்.[4]
இவர் இந்தியக் குடிமைச் சேவையில் சேர்ந்து கிழக்கு மாநிலங்களுக்கான பிராந்திய ஆணையராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சபை உறுப்பினர், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் இணை செயலாளர், போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராக பணியாற்றினார்.[5]
1966 மற்றும் 1972 க்கு இடையில் சிங் இந்திய ஜனாதிபதியின் செயலாளராக இருந்தார்.[5] பின்னர் 1972 அக்டோபர் 1 முதல் 1973 பிப்ரவரி 6 வரை இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தார்.[6] 1966, 1969, மற்றும் 1975ஆம் ஆண்டுகளில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு, 1967 முதல் 1972 வரை பகுதிநேர அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச சட்ட ஆணையத்தில் பணியாற்றினார். சர்வதேச பார் அசோசியேஷனின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1973ஆம் ஆண்டில், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக ஹேக்கிற்குச் சென்றார். பிப்ரவரி 1985 முதல் பிப்ரவரி 1988 வரை பணியாற்றி, ஓய்வு பெற்றபோது அதன் தலைவராக இருந்தார்.[5] இவர் தொடர்ந்து ஹேக்கில் வசித்து வந்தார், 1988 டிசம்பரில் இறந்தார்.
சிங்கிற்கு 1938இல் காமா விருது வழங்கப்பட்டது, 1973இல் இந்திய அரசு பத்ம விபூசண்விருதினை வழங்கியது.
{{cite web}}
: Missing or empty |title=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]