நாக்ரோத்தா இராணுவத்தளத் தாக்குதல் 2016 | |
---|---|
ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியா | |
இடம் | நாக்ரோத்தா, ஜம்மு, இந்தியா |
நாள் | 29 நவம்பர் 2016 5.30[1] (இ.சீ.நே.) |
தாக்குதல் வகை | தீவிரவாதம் பிணையக் கைதிகள் துப்பாக்கிச் சூடு |
ஆயுதம் | ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள்[2][3] |
இறப்பு(கள்) | 10 (7 இராணுவ வீரர்கள், 3 தீவிரவாதிகள்)[4] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | ஜெய்ஸ்-இ-முகமது[5] |
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திலுள்ள நாக்ரோத்தா (Nagrota) இராணுவத்தளத்தின் மீது 29 நவம்பர் 2016 அன்று தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்த இராணுவ நடவடிக்கையின் போது தீவிரவாதத் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளும் ஏழு இராணுவப் படையினரும் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு இராணுவ அதிகாரிகளும் அடங்குவர்[4][6][7][8].
உரி தீவிரவாதத் தாக்குதல் மற்றும் புர்கான் வானி இராணுவத்தினரால் கொல்லப்பட பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையும் கலவரங்களும் அதிகரித்தது.
29 நவம்பர் அன்று காலை 9:30 உள்ளூர் நேரப்படி இந்திய காவலரைப் போன்று உடையணிந்த மூன்று தீவிரவாதிகள் இந்திய இராணுவத்தின் மூன்றாவது பிரிவைத் தாக்கினர். இத்தாக்குதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நாக்ரோத்தா நகரில் அமைந்துள்ள இராணுவத்தளத்தின் மீது நடத்தப்படது. ஏ.கே 47 ரகத் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக்கொண்டே இராணுவக் குடியிருப்புப் பகுதிக்குள் தீவிரவாதிகள் இரு பிரிவாகப் பிரிந்து நுழைந்தனர். பிணையக் கைதிகளாக இரு குழந்தைகள், இரு பெண்கள் மற்றும் இராணுவ வீரர்களை வைத்திருந்தனர். பதில் தாக்குதலுக்குப் பின்னர் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மேலும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.