நாசீசு பிரதாப்கர்கி | |
---|---|
பிறப்பு | முகமது அகமது[1] 12 சூலை 1924 பிரதாப்கர், உத்தரப் பிரதேசம் |
இறப்பு | 10 ஏப்ரல் 1984 லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா[1] | (அகவை 59)
தேசியம் | இந்தியர் |
பணி | கவிஞர் |
நாசீசு பிரதாப்கார்கி (பிறப்பு முகமது அகமது; 12 சூலை 1924 - 10 ஏப்ரல் 1984) [2] இந்தியாவைச் சேர்ந்த உருது கவிஞர் ஆவார். இவர் தனது எண்ணங்கள் மற்றும் உருது கவிதைகளை விரும்புபவர்களுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கும் திறனுக்காக அறியப்பட்டவர்.
பிரதாப்கர்கி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்தவர்.
பிரதாப்கர்கி முக்கியமாக உருது கசல்களை எழுதியுள்ளார். இவர் சீமாப் அக்பரபாடியின் சீடர் ஆவார். நயா சாஸ் நயா அண்டாஸ் என்ற இவரது கசல் தொகுப்பு உத்தரப் பிரதேச உருது அகாதமியால் வெளியிடப்பட்டது.[3] 1983-ல், உருது இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் காலிப் விருதைப் பெற்றார்.[4]
பிரதாப்கர்கி தனது வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். மேலும் இவர் திரைப்படத் துறையை அணுகியபோதும், இவர் தனது பாடல்களை விற்கவில்லை. இதனால் இவர் ஏழையாகவே வாழ்க்கையினை வாழ்ந்தார்.[5]