1993 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஓராண்டுக்கு ரூ. 5 கோடி என்ற அளவில் நிலை பெற்றுள்ளது.இந்த நிதியை எந்தெந்தத் திட்டங்களுக்கு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.[1]
15ஆவது மக்களவையின் பதவிக் காலம் முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் தொகுதி வளர்ச்சி நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாகப் பயன்படுத்தாத நிலையே காணப்பட்டது.இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 1,306 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 332.87 கோடி இன்னும் செலவிடப்படவில்லை. இதேபோல, அரியானா மாநிலதில் 24.15% நிதியும் , பஞ்சாபில் 25% நிதியும் பயன்படுத்தப்படாமல் உள்ளன . குஜராத்தில் இது 25.50 சதவிகிதமாக உள்ளது.[2]
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை தங்களது உறவினர்களால் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியை மடைமாற்றிவிட்டு, முறைகேடுகளில் ஈடுபடுவதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தரம் குறைந்ததாக உள்ளன என்றும், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.[2]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)