நாட்டுப்புற வகைப்பாட்டியல் (Folk taxonomy) என்பது அறிவியல் வகைப்பாட்டிலிருந்து வேறுபட்ட பெயரிடும் முறையாகும். நாட்டுப்புற உயிரியல் வகைப்பாடு என்பது மக்கள் பாரம்பரியமாக தங்கள் இயற்கையான சூழலை/அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை விவரிக்கும் மற்றும் ஒழுங்கமைக்கும் விதம் ஆகும். பொதுவாக "புதர்கள்", " பூச்சி", "வாத்துகள்", "மீன்கள்" போன்றவை அல்லது பொருளாதார முக்கியத்துவம் அடிப்படையில் " விளையாட்டு விலங்கு " அல்லது " பொதி விலங்கு " போன்ற அளவுகோல்கள் மூலம் குறிப்பதாகும்.
நாட்டுப்புற வகைப்பாட்டியல் சமூக அறிவிலிருந்து உருவாக்கப்பட்டவை. மேலும் இவை அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இவை சமூக உறவுகளிலிருந்து பிரிக்கப்பட்டதாகக் கூறும் உயிரியல் வகைப்பாட்டிலிருந்து வேறுபடுகின்றன. இதனால் இவை அதிக புறநிலையுடன் உலகளாவியவையாக உள்ளன . நாட்டுப்புற வகைப்பாட்டியல் வகுப்புகளின் வகைகளை பிரபலமாக அடையாளம் காண உதவுகிறது. மேலும் மனித செயல்பாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்குப் பெயரிடும் முறைகளைக் கொண்டுள்ளன. இந்த பெயரிடும் முறைகள் விலங்குகளை அடையாளங்கான முக்கிய உதவி புரிகின்றது. இவை பழம் தரும் மரங்கள் முதல் பெரிய பாலூட்டிகளின் பழக்கவழக்கங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கியது. இந்த உள்ளூர் பெயரிடும் முறைகள் நாட்டுப்புற வகைபிரித்தல் ஆகும். தியோப்ராசுடசு தாவரங்களுக்கான கிரேக்க நாட்டுப்புற வகைப்பாட்டியல் பற்றிய சான்றுகளைப் பதிவு செய்தார். ஆனால் பின்னர் முறைப்படுத்தப்பட்ட தாவரவியல் வகைப்பாட்டியல் 18ஆம் நூற்றாண்டில் கரோலஸ் லின்னேயசா அமைக்கப்பட்டன.
மானுடவியலாளர்கள், வகைப்பாட்டியல் பொதுவாக உள்ளூர் கலாச்சார மற்றும் சமூக அமைப்புகளில் உட்பொதிக்கப்பட்டு பல்வேறு சமூக செயல்பாடுகளுக்குச் சேவை செய்கின்றன எனத் தெரிவிக்கின்றனர். நாட்டுப்புற வகைப்பாட்டியல் மிகவும் அறியப்பட்ட மற்றும் மிகவும் பயன்பாடு/பாதிப்பு மிக்க ஆய்வுகளில் ஒன்று எமில் டேர்கெமின் மத வாழ்க்கையின் அடிப்படை வடிவங்கள் (The Elementary Forms of Religious Life) ஆகும். நாட்டுப்புற வகைப்பாட்டியல் சில சமயங்களில் லின்னேயன் வகைப்பாட்டியல் அல்லது பரிணாம உறவுகளின் தற்போதைய விளக்கங்களுடன் முரண்படுகின்றன என்பதை அறிவியலாளர்கள் பொதுவாக அங்கீகரிக்கின்றனர். சில மானுடவியலாளர்கள் இனம் என்பது நாட்டுப்புற வகைப்பாட்டியல் என்று கூறுகிறார்கள்.[1][2][3]