நானோரானா மினிகா (Nanorana minica) (பொதுவான பெயர்கள் நேபாள பா தவளை, சிறிய தவளை, சிறு பா தவளை) என்பது டைக்ரோகுளோசிடேகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளைசிற்றினம் ஆகும். இது வட இந்தியா (உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம்) மற்றும் மேற்கு மற்றும் கிழக்கு நேபாளத்தில் காணப்படுகிறது.[2] இது மிதவெப்ப மண்டல மலைப்பாங்கான காடு மற்றும் நீரோடைகளில் காணப்படும் மிகவும் பொதுவான சிற்றினமாகும். காடுகளை உள்ளூர் மயமாக்கப்பட்ட அகற்றுவதன் மூலம் வாழ்விட இழப்பால் இது அச்சுறுத்தப்படுகிறது.[1]நா.மினிகா தலைப்பிரட்டைகள் நீரோடைகளில் குளிர்காலத்தில் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[3] நீரோட்ட மேலாண்மை மற்றும் தடுப்பணைகள் மூலம் அடுத்தடுத்த வாழ்விட மாற்றம் இவற்றில் அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.[1] குளிர்காலத் தலைப்பிரட்டைகளின் நடத்தை, வாழ்விடப் பயன்பாட்டு முறைகள் மற்றும் உருத்தோற்றப் பண்புகளைக் கட்டுப்படுத்தும் காரணிகளாகத் தடுப்பணைகள் கண்டறியப்பட்டுள்ளன.[4][5]
↑Frost, Darrel R. (2013). "Nanorana minica (Dubois, 1975)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 24 December 2013.