நானோரானா மெடாக்ஜென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நானோரானா
|
இனம்: | நா. மெடாக்ஜென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
நானோரானா மெடாக்ஜென்சிசு (பெய் & யெ, 1999) | |
வேறு பெயர்கள் | |
பா மெடாக்ஜென்சிசு பெய் & யெ, 1999 |
நானோரானா மெடோஜென்சிசு (Nanorana medogensis) எனும் மெடாக் முட் தவளை என்பது டைக்ரோகுளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.இது சீனா திபெத்தில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் இந்திய எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு திபெத்தில் உள்ள மெடாக் கவுண்டியில் உள்ள இதன் வகை வட்டாரத்திலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[2] இது காடுகள் நிறைந்த நீரோடைகளில் வாழ்கிறது. சில சமயங்களில் குளங்கள் மற்றும் குளங்களின் ஓரங்களிலும் காணப்படுகிறது.[1]
நானோரானா மெடோஜென்சிசு ஒப்பீட்டளவில் பெரிய தவளைகள் ஆகும். ஆண் தவளையின் நீளம் 71 mm (2.8 அங்) ஆகும். பெண் தவளையின் உடல் நீளம் 114 mm (4.5 அங்).தலைப்பிரட்டையின் நீளம் 68 mm (2.7 அங்) ஆகும்.[3]