நான் அடிமை இல்லை | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | துவாரகீஷ் |
தயாரிப்பு | துவாரகீஷ் |
திரைக்கதை | எஸ்.எல்.பிகாரி, பார்தோ முகர்ஜி |
இசை | விஜய் ஆனந்த் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீதேவி க்ரீஷ் கர்னாட் மனோரம விஜயகுமார் தேங்காய் சீனிவாசன் ஒய்.ஜி.ககேந்திரா டெல்லி கணேஷ் |
ஒளிப்பதிவு | தேவி பிரசாத் |
படத்தொகுப்பு | கவுதம்ராஜ் |
கலையகம் | துவாரகீஷ் சித்ரா |
வெளியீடு | 1 மார்ச் 1986 |
ஓட்டம் | 145 நிகிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்l |
நான் அடிமை இல்லை (Nann Adimai Illai) துவாரகீஷ் இயக்கத்தில் 1986 ல் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி முக்கிய கதாபாதிரங்களில் நடித்துள்ளனர்.[1][2][3][4] ஸ்ரீதேவி நடித்த கடைசித் தமிழ்ப்படம் இதுவேயாகும். இப்படதிற்குப் பின்னர் அவர் இந்தி படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மீண்டும் 2012 ல் வெளிவந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில்தான் தமிழில் தோன்றினார். இப்படம் துவாரகீஷ் இயக்கத்தில் விஷ்ணுவர்தன் நடித்து கன்னடத்தில் வெளிவந்த 'நீ பரேடே காதம்பரி' படத்தின் மறு ஆக்கமாகும். மேலும் இந்தியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் நடிப்பில் 'பியார் ஜுக்தா நஹின்' என்ற பெயரில் வெளிவந்தது. இது தெலுங்கு மொழியில் கிருஷ்ணா, ஸ்ரீதேவி நடிக்க 'பஞ்சனி கோபுரம்' என்ற பெயரில் வெளிவந்தது.
விஜய் (ரஜினிகாந்த்) ஒரு தொழில்முறை புகைப்படக் களைஞனாவான். பணக்காரப் பெண் பிரியா ஸ்ரீதேவிவின் மீது காதல் கொள்கிறான். அவர்களின் பெற்றோரது சம்மதமின்றி இருவரின் திருமணம் நடைபெறுகிறது. இருவருடைய குடும்பப் பின்னணி காரணமாக வெகு விரைவிலேயே இத்திருமணம் மிகவும் கடினமாக மாறுகிறது. இருவருக்கும் சண்டை மூண்டு பிரியா தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்புகிறாள். சில நாட்களுக்குப் பிறகு பிரியா அடிக்கடி வயிற்று வலியால் துடிக்கிறாள். அவளை பரிசோதித்த மருத்துவர் அவள் ஒரு குழந்தைக்கு தாயாகப் போவதாக கூறுகிறார். இந்த செய்தியை கேட்டவுடன் பிரியா தனக்கும் விஜய்க்கும் இடையே உள்ள வேலியை உடைக்க நினைக்கிறாள். விஜயிடம் இதைப்பற்றிக் கூற நினைக்கிறாள், ஆனால் அவளது தந்தை அவளைத் தடுத்து வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால் தனது தந்தை தூங்கியவுடன் விஜய்யின் வீட்டிற்குச் செல்கிறாள். விஜய் அங்கே இல்லை. சமீபத்தில் வேறு எங்கோ சென்று விடுகிறான்.
அடுத்த காட்சியில் விஜய் தனது நண்பனை சந்திக்க மருத்துவமனை வருகிறான். வயிற்று வலியால் அவதிப்படும் பிரியாவும் அதே மருத்துவமனைக்கு வருகிறாள். இதையறிந்த விஜய் மிக்க மகிழ்ச்சியடைந்து பிரியாவிடம் பேச விழைகிறான். விஜய் இனி ஒருபோதும் பிரியாவைச் சந்திக்காமால் இருந்தால் குழந்தையை அவனுக்குத் தருவதாக பிரியாவின் தந்தை சொல்கிறார். விஜய்யும் வாக்குறுதித் தந்து குழந்தையுடன் திரும்புகிறான். கண் திறந்த பிரியா குழந்தையைத் தேட குழந்தை இறந்தே பிறந்து விட்டதென அவளது தந்தை கூறுகிறார். பிரியா மிகுந்த மனச்சோர்வடைந்து காணப்படுகிறாள். ஆனாலும் அவளுடைய குழந்தை இன்னும் உயிரோடுதான் இருப்பதாக நம்புகிறாள். விஜய் தனது மகனை ஆளாக்குகிறான். சில வருடங்களுக்குப் பின்னர் விஜய் இருக்குமிடத்தை நெருங்கிய பிரியா தனது மகனைக் காண்கிறாள். அவன் பிரியாவை விஜய்யிடம் அழைத்து செல்கிறான். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு விஜய் ஆனந்த் இசையமைத்திருந்தார்.[5][6] "ஒரு ஜீவன்தான்" என்ற பாடல் சிவரஞ்சனி இராகத்தில் அமைக்கப்பட்டது.[7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஒரு ஜீவன்தான்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:48 | ||||||
2. | "தேவி தேவி தேனில்" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், S. ஜானகி | 4:32 | ||||||
3. | "வா வா இதயமே 1" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:35 | ||||||
4. | "போனா போகுது புடவ" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:19 | ||||||
5. | "ஒரு ஜீவன்தான் (சோகப்பாடல் 1)" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:56 | ||||||
6. | "ஒரு ஜீவன்தான் (சோகப்பாடல் 2)" | வாலி | எஸ். ஜானகி | 5:20 | ||||||
7. | "வா வா இதயமே 2" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:27 | ||||||
மொத்த நீளம்: |
29:35 |
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)CS1 maint: unrecognized language (link)