நான்காம் செயேந்திரவர்மன்

நான்காம் செயேந்திரவர்மன்
ராஜாதிராஜா
சம்பா இராச்சியத்தின் அரசன்
ஆட்சிக்காலம்1167–1192
முன்னையவர்இரண்டாம் செய அரிவர்மன்
பின்னையவர்வித்யானந்தனன்
பிறப்பு?
இறப்பு1192
துணைவர்பரமேசுவரி
ராயா
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசி பாக்யவதி
இளவரசி சுமித்ரா
இளவரசி சுதக்சினா
பெயர்கள்
செயேந்திரவர்மன்
மதம்சைவ சமயம் , இந்து சமயம், மகாயான பௌத்தம்

நான்காம் செயேந்திரவர்மன் (Jaya Indravarman IV) 1167-1192 வரை, நவீன வியட்நாமில் அமைந்திருந்த முன்னாள் பிராந்தியமான சம்பா இராச்சியத்தின் அரசராக இருந்தார். இவர் சீன அரசவைக்கும், தாய் வியட் ஆகியோருக்கு அடிபணிந்து ஆட்சி செய்தார். தரைவழிப் படையெடுப்பிற்காக சீனாவிலிருந்து குதிரைகளை வாங்குவதில் தோல்வியுற்ற இவர், கப்பல் படையைத் தயாரித்தார்.[1]:77–79

1177 இல் கெமர் பேரரசின் சம்பா படையெடுப்பிற்கு தலைமை தாங்கியதற்காக இவர் குறிப்பிடத்தக்கவர். இவரது கடற்படைப் படைகள் மீகாங் மற்றும் தொன்லே சாப் ஆறுகள் வழியாக தொன்லே சாப் வரை பயணித்து அங்கோரைக் கைப்பற்றி திரிபுவனாதித்யவர்மனைக் கொன்றனர். [2] :120[3] :163–164,166

1190 ஆம் ஆண்டில், இரண்டாம் தரணிந்திரவர்மனின் மகனும் வாரிசுமான கெமர் மன்னர் ஏழாம் செயவர்மன், சம்பாவுக்கு எதிராக பழிவாங்க முயன்றார். தலைநகர் வித்யானந்தனனால் கைப்பற்றப்பட்டது. மேலும், செயேந்திரவர்மன் மீண்டும் கம்போடியாவுக்கு கைதியாக கொண்டு வரப்பட்டார். கம்போடியாவின் மன்னர் பின்னர் 1191 இல் அரியணையை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் இவரை விடுவித்தார். இருப்பினும், வித்யானந்தனன் இவரை தோற்கடித்து, செயேந்திரவர்மனைக் கொலை செய்தார். [4] :78–79

சான்றுகள்

[தொகு]
  1. Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9747534991
  2. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
  3. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  4. Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9747534991ISBN 9747534991