நான்கு கில்லாடிகள் | |
---|---|
இயக்கம் | எல். பாலு |
தயாரிப்பு | ஆர். சுந்தரம் தெ மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | ஜெய்சங்கர் பாரதி |
வெளியீடு | செப்டம்பர் 25, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 3974 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான்கு கில்லாடிகள் (Naangu Killadigal) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எல். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
தங்களது குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனையில் இருந்து மீண்டுவரும் நான்கு நண்பர்கள் திரைப்படம் எடுத்து தம் குடும்பத்திற்குப் பண உதவி செய்ய முயலுகின்றனர் . பிரம்மா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பில் இறங்குகிறார்கள். நரேந்திரன், சந்தோஷ்குமாரி என்னும் முன்னணி நடிகர்களை வைத்து ஒரு கொலைச் சம்பவத்தை மையப்படுத்தி படமும் எடுக்கின்றனர். சந்தோஷ்குமாரி, இயக்குநர் குமார் இருவருக்கும் இடையே காதல் மலருகிறது. சந்தோஷ்குமாரியை மணக்க விரும்பும் நரேந்திரன் தனது கையாள் மூலம் இயக்குநர் குமாரைக் கொல்ல ஏற்பாடு செய்கிறான். கொலை முயற்சி தோல்வியுற்று, நரேந்திரனும் அவன் கையாளும் கைது செய்யப்படுகிறார்கள். இயக்குநர் குமார் ஜெய்சங்கர், தயாரிப்பாளர் ஐயர் மனோகர், மேனேஜர் நடனம் தேங்காய் சீனிவாசன், பார்ட்னர் பாபு சுருளிராஜன் தங்கள் தயாரிப்பான "பூக்காரி" படத்தை வெளியிடுகிறார்கள். அந்த படத்தைத் தயாரித்து வெளியிட தாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு நால்வரும் சிறைக்குச் செல்கிறார்கள். படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் தமது குடும்பத்தாரைச் சந்தித்து சீக்கிரம் திரும்பி வருவதாக நான்கு நண்பர்களும் விடைபெறுகிறார்கள்.
இத்திரைப்படத்திற்கு வேதா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், ஏ. எல். நாராயணன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2][3]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:22 |
"நெஞ்சுக்கு நிம்மதி" | பி. சுசீலா | 03:19 |
"எது எதிலே பொருந்துமோ" | பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி | 03:17 |
"பூக்கடப் பக்கம் டீக்கடையோரம்" | எஸ். வி. பொன்னுசாமி, எல். ஆர். ஈசுவரி | 03:56 |