நான்சி ஜோ பவல் |
---|
|
|
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் |
---|
பதவியில் உள்ளார் |
பதவியில் ஏப்ரல் 2012 |
|
|
நான்சி ஜோ பவல் (English: Nancy Jo Powell) (பிறப்பு - 1947) 2012 ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமனம் [1] செய்யப்பட்டார். நேபாளத்துக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய பின் நான்சி ஜோ பவல் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பொது இயக்குனராக பதவியேற்றார். 1977-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவு விவகாரத் துறையில் சேர்ந்த அவர் அதற்குப் பின் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
[2] இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண் நான்சி ஜோ பவல் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொது இயக்குநர், 2009 - 2012
- நேபாளத்துக்கான அமெரக்க தூதர், ஜூலை 16, 2007 - 2009
- தெற்கு ஆசியாவுக்கான தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி, 2006 - 2007
- எவியான் இன்ப்லுவென்ஸா உட்பட தொற்றுநோய்கள் தடுப்பு இயக்கத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர், 2006.
- சர்வதேச போதை தடுப்பு மற்றும் சட்ட அமலாக்கத் துறையின் துணைச் செயலர், மார்ச் 14 - நவம்பர் 25, 2005.
- அமெரிக்க சட்ட விவகாரத் துறையின் துணைச் செயலாளர், நவம்பர் 2004 - மார்ச் 2005.
- பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்ட் 9, 2002 - அக்டோபர் 2004.
- கானாவுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்ட் 14, 2001 - மே 2002.
- ஆப்பிரிக்க விவகாரத் துறையின் துணைச் செயலர், ஜனவரி 2001 - ஜூன் 2001.
- உகாண்டாவுக்கான அமெரிக்க தூதர், 1997 - 1999
- வங்காளதேசத்துக்கான அமெரிக்க தூதரக குழுவின் துணைத் தலைவர், 1995 - 1997
- டெல்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகர், 1993 - 1995.
- கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதர், 1992 - 1993.
- ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டிற்கான தூதரகக் குழுவின் துணைத் தலைவர், 1990 - 1992.