வகை | தனியார் நிறுவனம்/சார்ல்,[1] துணைம நிறுமம் தே.ஈ.எ.நி |
---|---|
நிறுவுகை | 1991[2] |
தலைமையகம் | புல்லி, சுவிட்சர்லாந்து |
முதன்மை நபர்கள் | செய்போல்லாக் யாசுன்சாசு,.[3] |
தொழில்துறை | எண்னெய் மற்றும் எரிவாயு |
உற்பத்திகள் | பெட்ரோலியம் இயற்கை எரிவாயு பெட்ரோ வேதிப்பொருட்கள் |
சேவைகள் | வணிகம்/பொது ஒப்பந்தக்காரர் |
வருமானம் | US$21.9 பில்லியன் (2008)[4] |
நிகர வருமானம் | $134 மில்லியன் (2008)[4] |
தாய் நிறுவனம் | தே.ஈ.ஏ.நி[5] |
இணையத்தளம் | www |
நாப்திரான் இடைவணிக நிறுவனம் (Naftiran Intertrade Company Sàrl) சுவிட்சர்லாந்தைச் சார்ந்த தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனம் ஆகும். (தே.ஈ.எ.நி). இந்நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒரு பொது ஒப்பந்ததாரராகச் செயல்படுகிறது. ஈரானின் பெட்ரோல் இறக்குமதிகள் பெரும்பாலானவற்றை இந்நிறுவனமே வாங்குகிறது [4]. ஈரானின் எரிசக்தித் துறையில், தேசிய இடைவணிக நிறுவனம் (தே.இ.நி) முக்கியப் பங்கு வகிக்கிறது [4] . தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் பெயரில் தேசிய இடைவணிக நிறுவனம் வர்த்தகம் மற்றும் பரிமாற்ற வணிகம் முதலான செயற்பாடுகளையும் மேற்கொள்கிறது. அசர்பைசான், துருக்மெனிசுதான், கசக்கசுத்தான் முதலான நாடுகளுடன் பரிமாற்ற வணிக உடன்பாடுகளைக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் மத்திய ஆசிய உற்பத்தியாளர்களிடம் கிடைக்கும் கச்சா எண்ணெயை காசுப்பியன் கடல் துறைமுகத்து கப்பல்களில் ஏற்றுகிறது. இதற்குப் பதிலாக தென்மேற்கு ஆசியாவின் பாரசீக வளைகுடாவிலுள்ள மத்திய ஆசிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அளித்த கச்சா எண்ணெய்க்குச் சமமான எண்ணெயை இந்நிறுவனம் பரிமாற்றம் செய்கிறது [6].
நாப்திரான் வர்த்தக சேவைநிறுவனம், பிரித்தானியாவின் யேர்சி தீவில் 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கச்சா எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களை வர்த்தகம் செய்வது இந்நிறுவனத்தின் நோக்கமாகும். அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான போட்டியிடும் வாய்ப்பை உருவாக்குவதும், உலகளவிலான ஆற்றல் பாதுகாப்பில் ஒரு முக்கியமான பங்காற்றுவதும் இந்நிறுவனத்தின் தொடங்கப்பட்டதற்கான நோக்கங்களாக இருந்தன.
2003 ஆம் ஆண்டில் தேசிய இடைவணிக நிறுவனத்தின் மேலாளர்கள் குழு சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் ஒரு முடிவை எடுத்தது [2][3]. இதன்படி, நாப்திரான் வர்த்தக சேவை நிறுவனத்தின் நடவடிக்கைகள் அமைத்தையும் புதியதாக நிறுவப்பட்டுள்ள நாப்திரான் இடைவணீக நிறுவனத்திற்கு மாற்றம் செய்தனர்.
பெட்ரோ சூய்சி இடைவணிக நிறுவனம், ஆங்காங் இடைவணிக நிறுவனம், நூர் ஆற்றல் நிறுவனம் (மலேசியா) பெட்ரோலிய ஆற்றல் இடைவணிக நிறுவனம் (துபாய்) போன்ற தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்திற்கான முன்னனி நிறுவனங்கள் யாவற்றையும் அமெரிக்கா அங்கீகரித்துள்ளது [7].
2005 ஆம் ஆண்டு முதல் 2008 வரையிலான காலத்தில் தேசிய இடைவணிக நிறுவனத்தின் வருவாய் 50 சதவீதம் உயர்ந்தது. அதாவது 14.7 பில்லியன் டாலர்களில் இருந்து 21.9 பில்லியன் டாலர்களாக உயர்வு கண்டது. அதேவேளையில் நிகர வருமானமும் 129 மில்லியன் டாலர்களிலிருந்து 134 மில்லியன் டாலர்களை எட்டியது [4].
ஈரான் கோட்ரோ, ஈரான் கனிமம் மற்றும் கனிமத்தொழிற்சாலைகள் வளர்ச்சி மற்ரும் சீரமைப்பு நிறுவனம், தேசிய பெட்ரோவேதிப்பொருட்கள் நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இவ்விடைவணிக நிறுவனத்தின் துணைம நிறுவனங்களாக இருந்தன.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழிற்சாலைகளுக்கான பொது ஒப்பந்ததாரரைக் குறிப்பது பெட்ரோபார்சு எனப்படும்.
பெட்ரோ ஈரான் வளர்ச்சி நிறுவனம் என்பது ஒரு பொதுவான கரையண்மைப் பரப்பு ஒப்பந்ததாரரைக் குறிக்கிறது. வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களிடம் 10 சதவீத முதலீட்டில் ஈரானியர்களை பங்குதாரர்களாக்கும் ஆரம்ப நோக்கத்துடன் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஈரானிய எண்ணெய் நிறுவனம் ஐக்கிய இராச்சியத்திலுள்ள ரும் எரிவாயுநிலத்தின் பொறுப்பில் இருக்கிறது. வட கடலில், ரும்மின் கரையண்மை எரிவாயு நிலத்தின் 50 சதவீதம் ஈரானுக்குச் சொந்தமாக உள்ளது [4].
அசர்பைசானிய சா டெனிசு எரிவாயு நிலத்தில், பிரித்தானிய பெட்ரோலியம் மற்றும் பிற வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் ஈரான் 10 சதவீதம் கூட்டுமுனைவு பங்கேற்பைக் கொண்டுள்ளது. இங்கு ஓராண்டுக்கு 8 பில்லியன் கனமீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. இதன் மதிப்பு 2.4 பில்லியன் டாலர்கள் [4] Shah Deniz is not subject to US sanctions.[8]ஆகும். சா டெனிசு அமெரிக்காவின் அங்கீகரிப்புக்கு உட்பட்டதல்ல. 2010 ஆண்டில் பிரித்தானிய பெட்ரோலிய நிறுவனத்தில் தேசிய இடைவணிக நிறுவனம் 24,683,858 பங்குகளுக்கு உரிமையாளராக உள்ளது. இதன் மதிப்பு தோராயமாக 775 மில்லியன் டாலர்கள் ஆகும் [4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
.