நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 2 ஏப்ரல் 1924 நாமகிரிப்பேட்டை |
இறப்பு | 30 ஏப்ரல் 2001 (அகவை 77) |
பணி | இசைக் கலைஞர் |
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் (2 ஏப்ரல் 1924 – 30 ஏப்ரல் 2001)[1], தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இந்தியா முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
இவரின் தந்தை பெயர் காத்தாசாமி பிள்ளை. தாய் குஞ்சம்மாள். நாமகிரிப்பேட்டை அரசினர் பள்ளியில் பயின்றவர்.
நாதசுவரம் வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி ரசிகர்களை கவர்ந்தவர். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் பாட்டனார் சின்னப்ப முதலியாரிடம் நாதசுவரமும், வாய்ப்பாட்டும் கற்றார். பின் அருப்புக்கோட்டை கணேசனிடம் முறைப்படி நாதசுவரம் பயின்றார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாதசுவரக் கச்சேரிகளை ஏராளமாக நிகழ்த்தியுள்ளார்.[2]
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் ‘ஆஸ்தான சங்கீத வித்வானாக’ 1977 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.