நாமக்கல் கோட்டை Namakkal Fort | |
---|---|
பகுதி: தமிழ்நாடு | |
நாமக்கல், தமிழ்நாடு, இந்தியா | |
![]() | |
நாமக்கல் கோட்டை | |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தொல்லியல் துறை |
நாமக்கல் கோட்டை (Namakkal Fort) என்பது தமிழகத்தின், நாமக்கல் மாவட்டம், நாமக்கல்லில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். இந்தக்கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் ஓரு கோயிலும், மசூதியும் உள்ளன. இவை இரண்டும் நகரின் பிரபல சுற்றுலாத் தலங்களாக உள்ளன. தற்காலத்தில் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்து மதத் தொன்மவியல் படி, கோட்டை அமைந்துள்ள இந்த மலையைக் கொண்டுவந்தது அனுமன் ஆவார். இந்த மலையின் வேறு பெயர்களாக நாமகிரி, சாலக்கிராமம் ஆகியவை வழங்கப்படுகின்றன. சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் என அறியப்படுகிறது. அனுமன் இலங்கைக்கு சஞ்சீவி மலையை கொண்டு பறந்து இவ்வழியாக செல்லும்போது இங்குள்ள கமலாலயக் குளத்தைப்பார்த்து இங்கேயே அவரது காலை வழிபாட்டை செய்ய இறங்கினார். அவர் இமயமலையில் இருந்து கொண்டுவந்த சாலக்கிராமத்தை வைத்து வழிபட்ட பின்னர், அவர் கண்களைத் திறந்து பார்த்தபோது அவர் வைத்த சாலக்கிராமக் கல் தற்போதைய அளவில் வளர்ந்துவிட்டதைப் பார்த்தார். அப்போது ஒரு தெய்வீக குரல் கல்லை இவ்விடமே விட்டுவிடுமாறு அவரைக் கேட்டது.[1] மற்றொரு தொண்மவியல் கதையின்படி விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர் இரண்யனை அழித்தபின்பும் சினம் தணியாத நிலையில் இருந்தவரை அனுமன் இந்த இடத்திற்கு அவரை அழைத்துவந்து விஷ்ணுவை மணக்க தவம் செய்துவந்த மகாலட்சுமியை விஷ்ணுவின் மனைவியாக்கினார்.
இந்தக்கோட்டை நாமக்கல் நகரின் மையத்தில் நாமகிரி என்ற பெயரில் ஒரேகல்லில் அமைந்துள்ள மலையின்மீது கட்டப்பட்டுள்ளது.[1] இம்மலை உச்சியில் இக்கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையில் ஒருநரசிம்மர் கோயிலும், ஒரு மசூதியும் உள்ளன இவையிரண்டும் இந்நகரத்தின் பிரபலமான சுற்றுலா தலங்களாக உள்ளன.[2] மலை அடிவாரத்தில் உள்ள கமலாலயும் தொட்டியும், கோட்டையைச் சார்ந்து தொடர்புடையது.[3] கமலாலயக் குளம் அடிவாரத்தில் இருந்தாலும் கோட்டையுடன் தொடர்புடையதாக உள்ளது. கோட்டை அந்த மலையில் இருந்த வெட்டப்பட்ட கற்கலைக்கொண்டே கட்டப்பட்டுள்ளது
இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் இருந்த சேந்தமங்கலம் பாளையக்காரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது, இதை கட்டியவர் மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா என்ற கருத்தும் நிலவுகிறது [4]. திப்பு சுல்தான் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையைப் பயன்படுத்தினார். கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை புகழ் பெற்றன. மிகப்பெரிய ஒற்றை பாறையின் (மலை) உச்சியில் கோட்டை உள்ளது. மலையை செதுக்கி குடைவரை கோவில்கள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள நரசிம்மர் கோயிலும் அரங்கநாதர் கோயிலும் மலையை குடைந்து செய்யப்பட்டவையாகும், மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாதர் கோவிலும் மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும் உள்ளன. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[5] இக்கோயில்களின் மண்டபங்களும் பிற கோயில்களும் பின்னால் கட்டப்பட்டதாகும். நரசிம்மர் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. ஆஞ்சநேயருக்கு கோபுரம் இல்லை. இந்த கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. மலையின் வடகிழக்கில் கமலாயக்குளம் உள்ளது. அதற்கு எதிரே நாமக்கல் நகரின் பேருந்து நிலையம் உள்ளது.